×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் " நாட்டின் பிரதமரை மாத்திடுவேன்"!! இந்தியாவே மாறிவிடும்! நடிகர் கிஷோர் ஆவேசம்..!!

நடிகர் கிஷோர் 2014 ஆம் ஆண்டிற்கு திரும்பும் வாய்ப்பு இருந்தால் பிரதமரை மாற்றியிருப்பேன் என கூறி அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisement

தமிழ் திரைப்பட நடிகர் கிஷோர் அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்று அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வாழ்க்கையில் பின்னோக்கிச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் 2014 ஆம் ஆண்டிற்குச் சென்று நாட்டின் பிரதமரை மாற்றியிருப்பேன் என அவர் தெரிவித்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2014 ஆம் ஆண்டை மாற்ற விரும்பிய காரணம்

அவ்வாறு செய்திருந்தால் இந்தியாவின் இன்றைய நிலையே மாறியிருக்கும் எனக் குறிப்பிட்ட கிஷோர், தற்போது நாட்டில் நிலவும் சூழல் குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, சமூகத்தில் பரவி வரும் வெறுப்புணர்வு மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: விஜய் மட்டும் இதை செய்தால் திமுகவின் தோல்வி உறுதி!! எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்..

வெறுப்புணர்வு குறித்து கடும் எச்சரிக்கை

வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்றும், அன்பு இல்லாத இடத்தில் எதுவும் நிலைக்காது என்றும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். இது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் முக்கிய பிரச்சினை என அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், எதிர்காலத்தில் இதனைச் சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகும் என்றும், மக்கள் மத்தியில் மனிதாபிமானமும் அன்பும் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் கிஷோர் தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.

அரசியல் மற்றும் சமூக நிலைமைகளைப் பற்றி நடிகர் கிஷோர் வெளியிட்ட இந்த அதிரடி கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாட்டின் நலனுக்காக அன்பும் மனிதாபிமானமும் மேலோங்க வேண்டும் என்பதே அவரது கருத்தின் மையமாக பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: விஜய்யின் மனநிலை.... திமுகவில் இணைய போகும் செங்கோட்டையன்..? அதிரடியாக கொடுத்த விளக்கம்! பீ டீம் விமர்சிப்பது அர்த்தமற்றது! பரபரப்பில் அரசியல் களம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actor kishore #தமிழ் சினிமா செய்திகள் #2014 Election #Political Statement #Social Awareness
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story