×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#JUSTIN: சரித்திரபுரட்சி முதல்வர் Vs கொளத்தூர் மக்களின் முடிவு.. திமுக - தவெக காரசார விவாதம்.! ஆதவ் அர்ஜுனா சரவெடி.!

TVK Minister Aadhav Arjuna: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில், தவெக Vs திமுக இடையே காரசார விவாதம் தொடர்ந்து வருகிறது. 

Advertisement

திமுகவினரை அமைச்சர் அர்ஜுனாவின் வார்த்தை விவாதம், அமளியை உண்டாக்கியது.

அமைதியாக கேட்கும் முதல்வர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 நிறைவுபெற்று, தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் உரை மீதான விவாதம் நடந்து வருகிறது. தவெக அரசின் செயல்பாடுகளை எதிர்த்து, பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுகவினர் வாதம் செய்து வருகின்றனர். இந்த விஷயத்துக்கு அமைச்சர்கள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வந்தாலும், முதல்வர் விஜய் அனைத்தையும் அமைதியாக கண்காணித்து வருகிறார்.

இதையும் படிங்க: சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மோதிக்கொண்ட தொண்டர்கள்.. தள்ளுமுள்ளு பரபரப்பு.!

திமுக எம்.எல்.ஏ Vs தவெக அமைச்சர்

இதனிடையே, திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் முதல்வர் குறித்து, "சிறுமிகள், பெண்கள் வன்கொடுமை என என்ன குற்றம் நடந்தாலும், வானமே இடிந்து விழுந்தாலும், என்ன நடந்தாலும் வாயைத் திறக்க மாட்டேன் என முதல்வர் சரித்திர புரட்சி செய்வது வருகிறார்" என சர்ச்சைக்குரிய வகையில் வாதம் செய்தார். இந்த விஷயத்துக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "எதை, எப்போது, எங்கு பேச வேண்டும் என முதல்வர் விஜய்க்கு தெரியும். அதனை நீங்கள் சொல்ல வேண்டாம். கொளத்தூரில் நீங்கள் இப்படி பேசியதால் தான் மக்களின் முடிவு இன்று உங்களுக்கு தெரியவந்துள்ளது" என பேசினார்.

ஆட்சி மாற்றம்:

கொளத்தூரில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்த விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் முதல் முறையாக கொளத்தூர் தொகுதி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசி இருப்பது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், அமைச்சர் ராஜ்மோகன், "முதல்வர் வாய் திறந்து பிரச்சாரம் செய்ததன் காரணமாக, உங்களின் முறைகேடுகளை மக்கள் தெரிந்துகொண்டு ஆட்சி மாற்றம் தந்துள்ளார்கள்" என பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் ஒலித்த இயக்குனர் அட்லியின் பெயர்.. அமைச்சர் சொன்ன அல்டிமேட் பதில்.. தக்ஃலைப் ரிப்ளை.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN politics #DMK Vs TVK #Tamilnadu Assembly Session #தவெக Vs திமுக #சரித்திரபுரட்சி முதல்வர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story