×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எஸ் சி எஸ் டி மாணவர்களுக்கு குரூப் 1 தேர்வு இலவச பயிற்சி; செய்ய வேண்டியது என்ன ? தெரிந்து கொள்ளுங்கள்..

எஸ் சி எஸ் டி மாணவர்களுக்கு குரூப் 1 தேர்வு இலவச பயிற்சி; செய்ய வேண்டியது என்ன ? தெரிந்து கொள்ளுங்கள்..

Advertisement

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பலன் பெறும் வகையில், குரூப் 1 தேர்வை எழுத விரும்புபவர்களுக்கு இலவசப் பயற்சி அளிக்க The people's education trust டாக்டர் அம்பேத்கர் அகாடெமி, திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

குரூப் 1 முதன்மைத் தேர்வு, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் எஸ்டி, எஸ்சி, மாணவர்களுக்கு இலவசப் பயற்சி அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் அகாடெமி L-73, 24ஆவது தெரு, காவேரி காலணி, அண்ணா நகர் கிழக்கு, சென்னை - 600102 என்ற இடத்தில் இலவசப் பயிற்சி ஆளிக்கப்படவுள்ளது. 

வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பயற்சி அளிக்கப்படும் என்றும் இந்த பயிற்சி இரண்டரை மாதங்கள் நடக்கும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற விரும்பும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள், ஜூலை 30-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். ambedkaracademy22@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். பயற்சி பெற விரும்பும் மாணவர்கள் நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.  9790794968/9840591300 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்கலாம். 

தமிழ்‌நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு - 1 (குரூப் - 1) முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேர்காணல் தேர்வுக்கு 137 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலியிடங்களை பணியமர்த்தும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஸ்சி நடத்திய இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதியுள்ளனர்.

இவர்களுக்கான முதன்மைத் தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 30-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு எழுதிய 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேரில், முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #group 1 exam #Free Coaching #SC ST Students
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story