×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோதுமை மாவில் மொறு மொறு சுவையான கோதுமை மாவு வடை செய்வது எப்படி...

கோதுமை மாவில் மொறு மொறு சுவையான கோதுமை மாவு வடை செய்வது எப்படி...

Advertisement

மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சாப்பிடுவதற்கு தகுந்த மொறு மொறு கோதுமை மாவு வடை செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்,
 ரவை - 1/2 கப், 
பச்சரிசி மாவு - 3 ஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு, தயிர் - 1/2 கப், 
தண்ணீர் - 11/2 கப், 
பச்சை மிளகாய் - 2, 
பெரிய வெங்காயம் - ஒன்று, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மிளகு இடித்தது- ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், 
சமையல் சோடா - கால் டீஸ்பூன்.

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் ரவை, தயிர், பச்சரிசி மாவு, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் விட்டு கெட்டியாக கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.

அதன்பின் இந்த கலவையுடன் தாளித்து சீரகத்தையும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சி, மிளகு இடித்தது, சமையல் சோடா, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக மாவு கவலையுடன் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு மூடி போட்டு 10 நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள். அப்போது தான் ரவை ஊறி இன்னும் மாவு கெட்டியாகும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வடையாக தட்டி போட்டு இருபுறம் நன்கு சிவக்க விட்டு எடுத்தால் மொறு மொறு கோதுமை மாவு வடை தயார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vadai #Wheat flour #Recipe
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story