முகம், கழுத்தில் மருக்கள் இருக்கா? இனி அதை கிள்ளாத்தீங்க... ஒரே வாரத்தில் உதிர்ந்து விட சூப்பர் டிப்ஸ் இதோ! வீட்டில் இருந்தப்படியே உதிர்ந்து விடும்!!!
HPV வைரஸ் காரணமாக உருவாகும் மருக்கள் குறித்து காரணம், வீட்டு வைத்தியம் மற்றும் மருத்துவ சிகிச்சை வழிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சருமத்தில் திடீரென தோன்றும் சிறிய கட்டிகள் பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக ‘மருக்கள்’ எனப்படும் இந்த வளர்ச்சிகள், HPV வைரஸ் தொற்றால் உருவாகின்றன. கை, கால், கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் காணப்படும் இவை, சரியான பராமரிப்பு இல்லையெனில் நீண்ட காலம் நீடிக்கக்கூடும்.
மருக்கள் உருவாகும் காரணம் என்ன?
தகவலின்படி, மனித பாப்பிலோமா வைரஸ் தாக்கம் காரணமாக சருமத்தின் மேல் பகுதி அதிகமாக வளர்ந்து மருக்கள் உருவாகின்றன. சிலருக்கு இது வேகமாக பரவக்கூடும். குறிப்பாக, ஈரப்பதம் அதிகமான சூழலில் அல்லது தோல் பாதுகாப்பு குறைந்தவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
வீட்டு வைத்தியம் – எவ்வளவு பயன்?
வீட்டிலேயே பயன்படுத்தப்படும் முறைகளில் ஆப்பிள் சிடார் வினிகர், பூண்டு சாறு, கற்றாழை ஜெல் ஆகியவை முக்கியமானவை. வினிகரை நீரில் கலந்து தடவுவதால் அதன் அமில தன்மை மருக்களை சுருங்கச் செய்ய உதவுகிறது. பூண்டில் உள்ள ‘அல்லிசின்’ என்ற பொருள் வைரஸ் எதிர்ப்பு பண்புடன் செயல்படுகிறது. கற்றாழை தொடர்ந்து பயன்படுத்தினால் வீக்கம் குறையும். ஆனால், வீட்டு வைத்தியம் எல்லோருக்கும் ஒரே மாதிரி பலன் தராது என்பது கவனிக்க வேண்டியது.
இதையும் படிங்க: முதல் சிக்னல் கொடுப்பது விரல்களின் நகம்தான்! இப்படியெல்லாம் இருந்தால் உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்!
மருத்துவ சிகிச்சை எப்போது அவசியம்?
சில மருக்கள் தானாகவே குறையலாம். ஆனால் நீண்ட நாட்களாக நீடிக்கும் அல்லது பெரிதாகும் நிலை ஏற்பட்டால், தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. கிரையோதெரபி, லேசர் சிகிச்சை, கெமிக்கல் பீலிங் போன்ற நவீன முறைகள் மூலம் அவற்றை அகற்ற முடியும். மேலும், சரும வகைக்கு ஏற்ப மருத்துவர் சிகிச்சை திட்டத்தையும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்குவார்.
எந்த முறையையும் தொடங்குவதற்கு முன், குறிப்பாக சென்சிட்டிவ் ஸ்கின் கொண்டவர்கள் ‘பேட்ச் டெஸ்ட்’ செய்வது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.