நடைப்பயிற்சியை இந்த முறையில் செய்தால் விரைவில் உடல் எடையை குறைக்கலாம்!!
நடைப்பயிற்சியை இந்த முறையில் செய்தால் விரைவில் உடல் எடையை குறைக்கலாம்!!
உடலில் உள்ள அதிகப்படிய கூடுதல் கொழுப்புகள் சேர்வதன் மூலம் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால், உடலில் பல பிரச்சினைகள் வருகிறது. அப்படி உடலில் சேரும் கொழுப்பை எரிப்பதற்கு நடைப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடப்பது கலோரிகளை எரித்து கொழுப்பை கட்டுப்படுத்துவதோடு உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
அப்படி நாம் செய்யும் நடைப்பயிற்சியை ஏனோதானோ என்று செய்யாமல், முறையுடன் செய்யும் போது கூடுதல் பலன் கிடைக்கிறது.
உதாரணத்துக்கு, நடைப்பயிற்சியின்போது வேகத்தை அதிகரிப்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். நிதானமாக நடப்பதை விட வேகமாக நடக்கும்போது அதிக கலோரிகளை அதிகமா எரிக்க முடியும். அதாவது ஜாக்கிங் செய்வது என்று கூறலாம்.
சமமான தரையில் நடப்பதை விட சற்று உயரமான பகுதியை நோக்கி நடப்பது கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும். தினமும் 10 ஆயிரம் அடிகள் நடப்பது நல்லது.