×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஸ்டைலிஷ் லுக்கில் கியூட்டாக போஸ் கொடுக்கும் நானி!" வைரலாகும் போட்டோஸ்!

ஸ்டைலிஷ் லுக்கில் கியூட்டாக போஸ் கொடுக்கும் நானி! வைரலாகும் போட்டோஸ்!

Advertisement

2009ஆம் ஆண்டு "அஷ்டசம்மா" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார் நானி. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் கெளதம் மேனனின் "நீதானே என் பொன்வசந்தம்" தெலுங்குப் பதிப்பிலும் நானி நடித்திருந்தார்.

தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள நானி, "நேச்சுரல் ஸ்டார்" என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். மேலும் சிறந்த நடிகர்களுக்கான பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள நானி, "வால்போஸ்டர் சினிமா" என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்துகிறார்.

மேலும் நானி திரைவாழ்க்கையைத் தாண்டி, தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்கியுள்ளார். 2012ஆம் ஆண்டு தனது 5 வருடக் காதலியான அஞ்சனாவை திருமணம் செய்து கொண்டார். இப்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் மிருணாள் தாகூருடன் நானி நடிக்கும் "ஹாய் நன்னா" திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், நானி தன்னுடைய சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது அவை வைரலாகி வருகின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema #tollywood #actor #nani #Photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story