உடலில் ரத்தம் அதிகரிக்க இவற்றை பின்பற்றினாலே போதும்!!
உடலில் ரத்தம் அதிகரிக்க இவற்றை பின்பற்றினாலே போதும்!!
உடலில் ரத்த அளவு அதிகமாக நாம் செய்ய வேண்டிய எளிய வழிமுறைகள்.
ரத்தம் அதிகரிக்க உதவும் உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும் மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து செய்தலே நமது உடலில் ரத்த அளவு அதிகரிக்கும்.
ரத்தம் அதிகரிக்க பீட்ரூட் பெரிதும் உதவுகிறது. பீட்ரூட்டை தினமும் காலையில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும் மற்றும் மாதுளை பழ ஜூசும் அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுவரொட்டி மற்றும் ஆட்டு ஈரல்களில் உடலில் ரத்தம் அதிகரிக்க தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இவற்றை உட்கொள்ள வேண்டும்.
மேலும், 12 ஆசனங்களை கொண்ட சூரிய நமஸ்காரத்தை தினமும் காலையில் செய்து வர வேண்டும்.