Thinai Laddu Recipe: சத்தான ரெசிபி.. தினை நட்ஸ் லட்டு செய்வது எப்படி?
Thinai Nuts Laddu Recipe: வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளுக்கு சத்தான தினை நட்ஸ் லட்டு செய்வது எப்படி என்பதை விரிவாக காணலாம்.
குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை செய்து கொடுப்பது பெற்றோரின் கடமை.
ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்டு அடம்பிடிப்பார்கள். இந்த சமயத்தில் பெற்றோர் குழந்தைகளின் ஆரோக்கியம் நிறைந்த எதிர்காலத்தை உறுதிசெய்ய சத்தான பொருட்களை பயன்படுத்தி எளிய உணவுகளை செய்து வழங்கலாம். இது சத்தான உணவுகளின் மீதான குழந்தைகளின் எதிர்மறை பார்வையை சரிசெய்யும். அந்த வகையில், இன்று தினை நட்ஸ் லட்டு செய்வது குறித்து காணலாம்.
தினை நட்ஸ் லட்டு செய்ய தேவையான பொருட்கள் (Thinai Nuts Laddu Recipe Seivathu Eppadi):
* தினை மாவு - ஒரு கப்,
* நெய் - 1/2 கப்,
* முந்திரி திராட்சை, பாதாம், பிஸ்தா கலவை - 1/2 கப் (பொடியாக நறுக்கி கொள்ளவும்),
* நாட்டுச் சர்க்கரை - 3/4 கப்
செய்முறை:
* முதலில் வானெலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதம், பிஸ்தா சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
* தினை மாவை மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ளவும்.
* நாட்டு சர்க்கரை, நட்ஸ் கலவையை சேர்த்து கைகளால் உதிர்த்து கிளறவும்.
* இறுதியாக நெய் சேர்த்து கை பக்குவப்படும் சூட்டில் உருண்டை பிரிக்க சுவையான நட்ஸ் லட்டு தயார்.