இளநரையை இயற்கையாக கருமையாக்க... தினசரி சாப்பிட வேண்டிய 7 அற்புத உணவுகள்.!
இளநரையை இந்த உணவுகளின் மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம்
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் இளைநரை பிரச்சனை பெரும்பாலானோருக்கு இருந்து வருகிறது. இந்த இளநரை பெரும்பாலும் மரபு, மன அழுத்தம், சத்துக்குறை, ஹார்மோன் மாற்றம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. சில உணவுகள் முடி ஆரோக்கியத்தையும், கருமையை நீண்ட நாள் பராமரிக்கவும் உதவுகின்றது. இளநரையை தடுக்கும் 7 முக்கிய உணவுகள் குறித்து இப்பதிவில் விளக்கமாக காணலாம்.
1. கறுப்பு எள்ளு - இதில் காப்பர், இரும்பு, மக்னீசியம் நிறைந்துள்ளது. எனவே கருப்பு எல்லை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் மெலனின் உற்பத்தியை அதிகரித்து முடி கருமையை பாதுகாக்கும்.
2. நெல்லிக்காய் - வைட்டமின் C அதிகம் உள்ள நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதால் முடி வேரை பலப்படுத்தி, முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.
3. கொண்டைகடலை - புரதம், இரும்பு, சிங்க், பையோடின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால் இது முடி வேருக்கு தேவையான சத்துகளை வழங்கி இளநரையை குறைக்கும்.
4.பேரிச்சம்பழம் - இரும்பு, பையோடின், காப்பர் போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால் இது முடியின் வேர்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
5.கறிவேப்பிலை - பீட்டா-கரோட்டீன், இரும்பு, வைட்டமின் B நிறைந்துள்ளது. எனவே இதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
6.பாதாம் - வைட்டமின் E, மக்னீசியம், ஓமேகா-3 கொழுப்பு அமிலம் போன்ற சத்துகள் உள்ளதால் முடி வேருக்கு தேவையான ஈரப்பதம் மற்றும் சத்துகளை அளிக்கும்.
7.கேரட் - பீட்டா-கரோட்டீன், வைட்டமின் A நிறைந்துள்ள கேரட்டை அன்றாடம் உணவில் எடுத்து கொள்ள வேண்டும். இது முடி வேரின் செல்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதோடு இள நரையாக இருக்கும் முடியை கருமையாக்க உதவுகிறது.
8. முட்டை - முட்டையில் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. எனவே தினசரி உணவில் வேக வைத்த முட்டைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் தலை முடிக்கு தேவையான புரோட்டின் சத்து கிடைக்கிறது. இதனால் முடி உதிராமல் அடர்த்தியாக வளரவும், இளநரையை தடுக்கவும் உதவுகிறது.
இதையும் படிங்க: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்ரிக்காட் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!?
இதையும் படிங்க: வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர்கள் அறிவுரை என்ன.!?