ஜப்பானியர்கள் காலையில் செய்யும் இந்த ரகசிய பழக்கம்.. நம் வாழ்க்கையையே சூப்பராக மாற்றிடும்.!
ஜப்பானியர்கள் காலையில் செய்யும் இந்த ரகசிய பழக்கம்.. நம் வாழ்க்கையையே சூப்பராக மாற்றிடும்.!
ஜப்பானியர்கள் காலை நேரத்தில் மேற்கொள்ளும் சில பழங்களை நாமும் மேற்கொண்டால் நம் வாழ்க்கை எதிர்பாராத அளவிற்கு முன்னேறும்.
Kaizen :
காலையில் எழுந்தவுடன் செல்போனை எடுத்து WhatsApp, Facebook, Instagram என பார்க்கத் தொடங்குவது இன்றைய பலரின் வழக்கமாகிவிட்டது. ஆனால் ஜப்பானிய வாழ்க்கை முறையில் நாளை அவசரமாகத் தொடங்குவதற்கு பதிலாக, மனதை ஒருமுகப்படுத்தி, அன்றைய நாளை திட்டமிட்டு தொடங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த அணுகுமுறையில் இருக்கும் ஒரு முக்கியமான சிந்தனைதான் “Kaizen”.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.. பிரஷர் குக்கர் வெடிக்காமல் இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்.!
தொடர்முயற்சி :
Kaizen என்பதற்கு எளிமையாகச் சொன்னால், “தொடர்ச்சியான சிறிய முன்னேற்றம்” என்று பொருள். வாழ்க்கையை ஒரே நாளில் தலைகீழாக மாற்ற வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, தினமும் ஒரு சிறிய விஷயத்தையாவது முன்பை விட சிறப்பாக செய்வதே இதன் அடிப்படை. காலையில் எழுந்ததும் அன்றைய தினம் முடிக்க வேண்டிய ஒரு முக்கியமான வேலையைத் தேர்ந்தெடுத்து, அதை முழு கவனத்துடன் செய்வது போன்ற சிறிய நடைமுறைகளும் இந்த சிந்தனைக்கு பொருந்தும்.
சிறிய இலக்குகள் பெரிய முன்னேற்றம் :
இதில் முக்கியமான விஷயம் “இன்று நான் என்ன செய்ய வேண்டும்?” என்பதைக் காட்டிலும், “நேற்றைவிட இன்று நான் என்ன சிறப்பாக செய்யப் போகிறேன்?” என்பதுதான். உதாரணமாக தினமும் 30 நிமிடங்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது, செலவுகளை 10 நிமிடங்கள் கணக்குப் பார்ப்பது, வீட்டில் தேவையில்லாத ஒரு பொருளை ஒழுங்குபடுத்துவது அல்லது உடற்பயிற்சியை சில நிமிடங்கள் செய்வது என சிறிய இலக்குகளை வைத்துக்கொள்ளலாம்.
தொடர் முயற்சி :
ஜப்பானிய வாழ்க்கை முறையில் இதுபோன்ற சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதன் காரணம், பெரிய வெற்றிகள் பல நேரங்களில் சிறிய பழக்கங்களின் தொடர்ச்சியான விளைவாக உருவாகின்றன என்பதுதான். ஒரே நாளில் அதிக வேலை செய்து அடுத்த சில நாட்கள் எதுவும் செய்யாமல் இருப்பதைவிட, தினமும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது நீண்ட காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
வாழ்க்கையை மாற்றும் ரகசியம் :
அதனால் நாளை காலை எழுந்தவுடன் உடனடியாக செல்போனை எடுப்பதற்கு முன், “இன்று நான் என்ன ஒரு சிறிய விஷயத்தை நேற்றைவிட சிறப்பாக செய்யப் போகிறேன்?” என்று உங்களிடம் நீங்களே கேட்டுப் பாருங்கள். அந்த ஒரு கேள்வியை தினமும் கேட்டு, அதற்கான ஒரு சிறிய செயலையும் செய்து வந்தால், சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்களே உணர முடியும். வாழ்க்கையை மாற்றுவது எப்போதும் பெரிய முடிவுகளால் மட்டுமல்ல; தினமும் செய்யப்படும் சிறிய மாற்றங்களாலும் முடியும்.
இதையும் படிங்க: லேட்-நைட்டில் பிரியாணி சாப்பிட ஆசையாக இருக்குதா? இதையெல்லாம் கவனிங்க பாஸ்.!