×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆஃப் பாயில் சாப்பிட்ட 8 வயது சிறுமியின் மூளை முழுவதும் புழுக்கள்..! ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..! மக்களே உஷார்..!

Tapeworm eggs found in girl brain near Delhi

Advertisement

கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடந்த சம்பவம் இது. அந்த சிறுமி பெயர் சீமா. சீமா நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்படுவந்தநிலையியல் சிறுமியின் பெற்றோர் அவளுக்கு சாதாரண தலைவலிக்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் சீமாவுக்கு எந்த பயனும் இல்லை.

இதனால் மருத்துவர்களை அணுகிய சீமாவின் பெற்றோர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் கொடுக்க அதிலும் எந்த பயனும் இல்லை. இறுதியாக டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்ற சீமாவின் பெற்றோர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சீமாவின் தலையை ஸ்கேன் செய்தபோது பேரதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், சீமாவின் மூளையை சுற்று நூற்றுக்கும் அதிகமான நாடாப்புழு முட்டைகள் இருந்ததால் சீமாவின் மூளை வீங்கியுள்ளது. முதலில் வீக்கத்தை குறைப்பதற்காக சீமாவுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை கொடுத்துள்ளனனர் மருத்துவர்கள். இதனால் 8 வயதில்லையே 40 கிலோவில் இருந்து 60 கிலோவுக்கு மாறியுள்ளார் சீமா.

நாளடைவில் நடக்கவும் முடியாமல், மூச்சு விடவும் முடையாமல் சிரமப்பட்ட சீமா ஒருகட்டத்தில் மயங்கி கீழேவிழுந்துள்ளார். மகளை தூக்கிக்கொண்டு சீமாவின் பெற்றோர் மருத்துவமனைக்கு ஓட, அங்கு சீமாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தீர்மானித்தனர்.

மிகவும் ஆபத்தான அருவியை சிகிச்சையை தொடங்கிய மருத்துவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காத்திருந்தன. கடைசியாக சீமாவின் மூளையில் இருந்த நாடாப்புழுக்களின் முட்டைகளை மருத்துவர்கள் அகற்றினர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, பொதுவாக மனித உடலுக்குள் நாடாப் புழுக்கள் இருப்பது இயற்கையான விஷயம் தான். நாடாப்புழுக்கள் ஒருவகை ஒட்டுண்ணி ஆகும். ஊட்டச்சத்துக்காக ஒருவரைச் சார்ந்திருக்கும் உயிரினமான இது உணவை கிரகிப்பதற்காக நமது உடலுக்குள்ளே இருக்கிறது.

சரியாக வேகவைக்கப்படாத உணவுகளை சாப்பிடும்போது அதில் இருக்கும் லார்வாக்கள் நமது உடலுக்குள் சென்று நாடாப்புழுக்களாக வளர்கிறது என கூறிஉள்ளன்னர். உதாரணத்திற்கு, சரியாக வேக வைக்காத முட்டை, காய்கறிகள், முட்டைகோஸ், கீரைகள், மாட்டிறைச்சி, சிக்கன், ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன் போன்ற மாமிச உணவுகள் மூலம் இந்த புழுக்கள் நமது உடலுக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysterious #Health
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story