தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்க காதலர் (அ) காதலி இப்டி செய்றாங்களா.? உஷார்.. பிரேக்கப்க்கு அறிகுறி இதான்.!

உங்க காதலர் (அ) காதலி இப்டி செய்றாங்களா.? உஷார்.. பிரேக்கப்க்கு அறிகுறி இதான்.!

symptoms of break up Advertisement

காதலின் மகிமை

காதல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. உலகத்தில் காதல் செய்யாத உயிரினமே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால், இந்த காதலால் தான் மனிதர்கள், விலங்குகள் எல்லாமே பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றன. சிலர் காதல் தோல்வியால் உயிரை விடும் அளவிற்கு செல்கின்றனர். ஒரு சிலரோ காதலால் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு படிநிலைகளில் உயர்ந்து வெற்றி பெறுகின்றனர்.

பிரேக்கப்பால் திருப்பங்கள்

இப்படி காதல் பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய சொல்லிக் கொண்டே இருக்கலாம். காதல் என்றாலே அதில் பிரேக் அப் என்ற ஒரு பகுதியும் இருக்கும். சிலருக்கு இந்த பிரேக்கப் அடிக்கடி சண்டை, சச்சரவுகளுக்கு வழிவகை செய்யும். ஆனால், மீண்டும் அவர்கள் சேர்ந்து விடுவார்கள். ஆனால், ஒரு சிலருக்கோ பிரேக்கப் அவர்களது வாழ்க்கையிலேயே பெரிய மாற்றங்களை உருவாக்கக்கூடிய ஒரு முடிவாக இருக்கும்.

இதையும் படிங்க: தூக்கி வீசும் ஆரஞ்சு தோலில், அழகை தரும் துவையல்.. ருசியோ பயங்கரம்.!

அறிகுறிகள்

Break Up

அப்படி உங்கள் காதலர் உங்களை பிரேக்கப் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அவர்களிடம் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம். உங்களுடைய காதலனோ அல்லது காதலியோ உங்களிடம் பிரேக் அப் செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால், முன்பு நீங்கள் உறவில் இருந்ததைப் போல உங்களுடன் நெருக்கத்தை காட்ட மாட்டார்கள். 

தக்க சமயத்திற்கு காத்திருப்பார்கள்

உங்களிடம் விலக சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பார்கள் சின்ன சின்ன பிரச்சனைகளை கூட பேசி பெரிதாக்கி அதன் மூலம் விட்டு விலகி விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். நீங்கள் ஒரு விஷயத்தை தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும்போது, அதை அவர்கள் கவனிக்கவே மாட்டார்கள். கடமைக்கு பதில் கூறிக்கொண்டு நீங்கள் விளக்கமாக பேச முயற்சிக்கும் போது அவர்கள் எரிச்சல் அடைவார்கள். அதை உங்களிடம் வெளிப்படுத்தவும் செய்வார்கள். 

அக்கறையின்மை

உங்களுக்கு உடல் நலம் அல்லது நீங்கள் ஏதாவது கவலையுடன் இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் பகிர்ந்து கொண்டால் கூட அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்களை மிகவும் அலட்சியப்படுத்துவார்கள். உங்கள் மீதான அக்கறை அவர்களுக்கு சிறிதும் இருக்காது. இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உங்கள் காதல் விரைவிலேயே காலாவதியாக போகிறது என்று அர்த்தம் கவனமாக இருங்கள்.

இதையும் படிங்க: மூக்கு பகுதியில் கருப்பு புள்ளிகள் இருக்கா? அகற்ற செய்ய வேண்டியது என்ன? டிப்ஸ் உள்ளே.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Break Up #Love #relationship #lover
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story