×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலகளவில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் நாம் பயப்படுத்திக் கொண்டிருக்கும் டாப் பொருட்களின் தொகுப்பு!

Still we are using such things which was banned in other countries

Advertisement

உலக நாடுகளை பொறுத்தவரை இந்தியா ஒரு மிக பெரிய சந்தை. பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை இங்கு விற்பதற்கு எதிர்ப்புகள் மிகவும் குறைவு. அவ்வாறு மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டு நமது நாட்டில் விற்பனையாகு, பொருட்களை பற்றித்தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

1. விக்ஸ்
விக்ஸ் தயாரிப்பு உலகின் சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பல ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த தயாரிப்புகளை உட்கொள்வதால் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளும் அதிகமான பக்கவிளைவுகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் நம் நாட்டில் இது பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன.

2. குழந்தை வாக்கர்ஸ்
கனடா நாட்டில் 2004 ஆம் ஆண்டு முதல் பேபி வாக்கர் தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கர்ஸ் ஆபத்தானது மட்டுமல்லாமல், மோட்டார் மற்றும் மனநல வளர்ச்சியில் தாமதத்திற்கு பங்களிப்பு செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீங்கள் அங்கு விற்பனை செய்தால் 100 ஆயிரம் டாலர் அபராதத்திற்கு உட்படுத்தப்படுவீர்கள் அல்லது சிறையில் ஆறு மாதங்கள் உள்ளே தள்ளபடுவீர்கள்.

3. ரெட் புல்
ரெட் புள் என்ற ஆற்றல் பானம் டென்மார்க் பிரான்ஸ் மற்றும் லித்துவேனியா போன்ற இடங்களில் 18 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இது உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஒன்று. காரணம் இது இதய நோய் அபாயம் அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

4. நீல ஜீன்ஸ் தடை
வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் தடை செய்யப்பட்ட ஒன்று. இதை நீங்கள் அணிந்தால் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாவீர்கள், காரணம் இது அமெரிக்க நாட்டின் கொடி போல இருப்பதால் இதை அணிய வடகொரியாவில் தடை உள்ளது.

5. பிளாஸ்டிக் பைகள்
பல நாடுகளில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட ஒன்று. முதல் முதலில் இந்த பிளாஸ்டிக் பையை தடைசெய்யப்பட்ட நாடு பங்களாதேஷ், அதன்பின் பிரான்சு, தான்சானியா, சான் பிரான்சிஸ்கோ போன்ற அமெரிக்க நகரங்களில் தடை செய்யப்பட்டது. இது இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒன்றுதான் ஆனாலும் இந்தியாவில் பெரும்பாலான கடைகளில் இது கிடைக்கிறது.

6. ஐபோன் மற்றும் ஐபாட்
இது எல்லோருக்கும் நிச்சயமாக ஒரு அதிர்ச்சியான செய்தியாக இருக்கும். ஜனவரி 1 2015ஆம் ஆண்டு ரஷ்யர்களுக்கு ஒரு சோகமான நாள் காரணம் அந்த நாட்டில் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் தடை செய்யப்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Banned things #India using banned things
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story