×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எலும்புமுறிவு, நீரிழிவு நோயை குணப்படுத்தும் சோயா பீன்ஸ் கூட்டு... வீட்டிலேயே செய்வது எப்படி?..! 

எலும்புமுறிவு, நீரிழிவு நோயை குணப்படுத்தும் சோயா பீன்ஸ் கூட்டு... வீட்டிலேயே செய்வது எப்படி?..! 

Advertisement

நீரிழிவு நோயை குறைப்பதற்கு சோயாபீன்ஸ் உதவுகிறது. சோயா பீன்ஸ் உட்கொள்வதன் மூலமாக எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கும் விரைவில் குணமாகும்.

தேவையான பொருட்கள் :

சிறிய வெங்காயம் - 1 கைப்பிடி
மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ½ தேக்கரண்டி
தக்காளி - 1
கொத்தமல்லி - சிறிதளவு
பூண்டு, பட்டை - தேவையான அளவுசெய்முறை :

★முதலில் சோயா பீன்ஸை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

★பின் வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

★அடுத்து குக்கரில் தக்காளி, வெங்காயம், சோயா பீன்ஸ், உப்பு, பூண்டு, பட்டை, மிளகுத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் சேர்த்து 5 விசில் வரை வேக வைக்க வேண்டும்.

★அனைத்தும் நன்றாக வெந்தபின் மசித்து வடிகட்டி அடுப்பில் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

★இறுதியாக போதுமான அளவு உப்பு சேர்த்து, கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறி தோசை, சப்பாத்தி மற்றும் சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#soya #beans #kootu #Recipe #dosa #chappathi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story