பாம்பு தோல் உரிக்கும் அற்புத காட்சி! பாம்பு தோல் உரிக்க உதவி செய்வது யாருனு பாருங்க.
Snake removing its skin video goes viral

பாம்பு தோல் உரிப்பது பற்றி நாம் அனைவர்க்கும் தெரிந்திருக்கும். ஆனால் பாம்பு ஏன் தனது தோலை உரிக்கிறது? அதற்கு என்ன காரணம்? வாங்க பாக்கலாம்.
பொதுவாக பாம்பின் உடலை சுற்றி உட்தோல், வெளி தோல் என இரண்டு பகுதிகள் இருக்கும். வெளித்தோலை ஒப்பிடும்போது உட்தோலானது மிகவும் மென்மையானது. வெளித்தோல் மிகவும் கடினமான ஓன்று. பாம்பு தரையில் ஊர்ந்து செல்லும் போது அதன் உடலில் காயங்கள் ஏற்படாமல் இருக்கவே இந்த வெளித்தோல் பயன்படுகிறது.
இந்த வெளித்தோலானது நாட்கள் செல்ல செல்ல மிகவும் கடினமானதாக மாறி பாம்பின் பார்வையை குறைத்து விடுகிறது. இதனாலயே பாம்பு தனது தோலை உரிக்கிறது. தோல் அறிந்த பிறகு மீண்டும் வெளித்தோல் உருவாகிறது. இப்படி ஆண்டுக்கு மூன்றுமுறை தனது வெளித்தோலை உரிக்கிறது பாம்பு.
பாம்பு தோல் உரிப்பதை பாத்துருக்கீங்களா? கீழே உள்ள வீடியோ காட்சியில் பாம்பு மனிதனின் உதவியுடன் தனது தோலை உரிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதோ அந்த காட்சி.