வீட்டின் கடன் தொல்லை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமா? கல் உப்பை இப்படி பயன்படுத்துங்க... வாழ்க்கை ஜொலிக்கும்!
உப்பின் ஆச்சரியமான பயன்கள்! வீட்டு கஷ்டங்களை போக்கும் உப்பு வழிகள், திருஷ்டி நீக்கும் முறைகள் மற்றும் செல்வ அதிர்ஷ்டத்தை கூட்டும் ரகசியங்கள்.
நம் வீட்டில் இருக்கும் சிறிய பொருட்களும் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் உடையவை. அதில் ஒன்றான உப்பு, சமைப்பதற்கே அல்லாது கஷ்டங்களை போக்கும் ஒரு சக்திவாய்ந்த இயற்கை பொருளாக கருதப்படுகிறது. நம் முன்னோர்கள் பரம்பரை வழியாக பயன்படுத்தி வந்த சில உப்பு ரகசியங்கள் இன்றும் பலருக்கு பலன் அளித்து வருகின்றன.
உப்பின் முக்கியத்துவம்
உப்பு, உணவில் சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நம் வாழ்க்கையின் பல பிரச்சனைகளையும் குறைக்கும் தன்மை கொண்டது. கடலில் இருந்து கிடைக்கும் இந்த இயற்கை பொருள், அளவாக பயன்படுத்தப்படும் போது ஆரோக்கியத்துக்கும் அதிர்ஷ்டத்துக்கும் ஆதரவாக இருக்கும்.
கஷ்டங்களை போக்கும் உப்பு வழிகள்
வீட்டில் பணக் கஷ்டம் வராமல் இருக்க உப்பை கண்ணாடி ஜாடியில் அல்லது மண் பானையில் வைத்து பயன்படுத்த வேண்டும். மேலும், உப்பை யாருக்கும் கடனாக தரக் கூடாது; அப்படி செய்தால் மகாலட்சுமி விலகுவார் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: மல்லிகை செடியில் கொத்து கொத்தா பூ பூக்கணுமா ? வீட்டில் உள்ள பழைய சோற்றை வைத்து இப்படி பண்ணுங்க....
திருஷ்டி நீக்கும் முறைகள்
திருஷ்டி சுத்தும் போது கல் உப்பு பயன்படுத்துவது மிகப் பலனளிக்கும். அதை நெருப்பில் எரித்தால் கஷ்டங்கள் எரிந்து விடும்; நீரில் கரைத்தால் பிரச்சனைகள் கரைந்துவிடும். மேலும், வீட்டில் தொடர்ந்து கஷ்டங்கள் இருந்தால், காலை எழுந்தவுடன் கண்ணாடி ஜாடியில் உப்பை வைத்து மறுநாள் காலை அதை நீரில் கரைத்து செடிகளுக்கு அருகில் ஊற்ற வேண்டும்.
உப்பின் சக்தியை சரியான முறையில் பயன்படுத்தினால், அது சுவையையே அல்லாது வாழ்க்கையையும் இனிமையாக்கும். பழமையான இந்த வழிமுறைகள், நம் வீடும் மனமும் அமைதியாக இருப்பதற்கு வழிகாட்டும்.
இதையும் படிங்க: பெண்களே உஷார்! ஐப்ரோ த்ரெட்டிங் செய்வதால் கல்லீரல் செயலிழக்கும் அபாயமா! எச்சரிக்கை மருத்துவர்கள்...