சமைக்கும் போது இந்த எண்ணெய்யை மட்டும் யூஸ் பண்ணவே பண்ணாத்தீங்க.... உயிருக்கு ஆபத்து நிச்சயம்!
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் உடலுக்கு ஆபத்தானவை என நிபுணர்கள் எச்சரிக்கை. இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் அதிகரிக்கின்றன.
நாம் சாப்பிடும் உணவின் தரம் குறித்து அக்கறை கொள்வதோடு, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் குறித்தும் கவனம் செலுத்துவது அவசியம். சமீபத்தில், மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர் அலோக் சோப்ரா, சந்தையில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஆபத்தானவை என எச்சரித்துள்ளார்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் பாதிப்பு
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் உடலில் கெட்ட கொழுப்பு (LDL) அதிகரிக்கச் செய்து, ரத்த நாளங்களில் அடைப்பை உருவாக்குகின்றன. இது தொடர்ந்து இதய நோய், மாரடைப்பு போன்ற அபாயங்களை ஏற்படுத்தும்.
மேலும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இல்லாததால் உடலில் வீக்கம் அதிகரித்து, இதய தசைகளை பாதித்து, உயர் ரத்த அழுத்தத்தை தூண்டுகிறது. இத்தகைய எண்ணெய்களில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி, டைப்-2 நீரிழிவு மற்றும் உடல் பருமனை அதிகரிக்கின்றன.
இதையும் படிங்க: இப்படி ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் மாரடைப்பு வரும்.. உஷார்.. இவ்வளவு ஆபத்துக்களா.?!
சுத்திகரிப்பு செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன.
ஆரோக்கியமான மாற்று வழிகள்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கு பதிலாக செக்கு எண்ணெய் அல்லது குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துவது சிறந்தது. இவ்வாறான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஊட்டச்சத்துகளைப் பாதுகாத்து, உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.
எள் எண்ணெய், கடுகு எண்ணெய், வேர்க்கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை ஆரோக்கியமான தேர்வுகளாகும். ஒருமுறை சூடாக்கப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் அது நச்சு கலவைகளை உருவாக்கும் அபாயம் உள்ளது.
சமையலுக்கான எண்ணெய் தேர்வில், புகைப்புள்ளி (Smoke Point) முக்கியமானது. அதிக புகைப்புள்ளி கொண்ட வேர்க்கடலை எண்ணெய் வறுக்கச் சிறந்தது; சாலட்களுக்கு ஆலிவ் எண்ணெய் ஏற்றது.
இதனால், நம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியத்தை பாதுகாக்க, ஆரோக்கியமான எண்ணெய் தேர்வு செய்வது மிக முக்கியம். தவறான எண்ணெய் பயன்பாடு நீண்ட காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சிவப்பு இறைச்சிகளின் இந்த 3 பகுதிகள்! என்னென்ன தெரியுமா? தவறியும் சாப்பிடாதீங்க..