சுவையான புளிச்சக்கீரை சட்னி தயாரிப்பது எப்படி?.. சமையல் பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க.!
சுவையான புளிச்சக்கீரை சட்னி தயாரிப்பது எப்படி?.. சமையல் பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க.!
புளிச்ச கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து நிறைந்து காணப்படுவதால் ரத்தத்தை தூய்மை செய்யும் குணம் கொண்டது. அதேபோல, மலச்சிக்கல் பிரச்சனையும் சரி செய்யும். இன்று புளிச்ச கீரை சட்னி தயார் செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை - நான்கு கப்,
தனியா, மிளகாய் தூள் - தலா ஒரு கரண்டி,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
வேர்கடலை தூள் - இரண்டு கரண்டி,
சர்க்கரை மற்றும் பெருங்காயம் - சிறிதளவு,
கடுகு உளுந்து - தாளிப்பதற்கு..
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட புளிச்ச கீரையை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் தனியா மற்றும் மிளகாய் தூள், புளிச்சக்கீரை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பெருங்காயம், உப்பு ஆகியவற்றை உங்களின் சுவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து, இதனை நன்கு வதக்க வேண்டும்.
சட்னி பதத்திற்கு அரைத்து எடுத்தால் சுவையான புளிச்ச கீரை சட்னி தயார். இதனை இட்டிலி, தோசையோடும் சாப்பிடலாம். அரிசி சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.