×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அய்யயோ.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா.? தினமும் அவதிப்படும் பொதுமக்கள்.! பலருக்கும் வரும் போன் கால்கள்.!

செல்போன்கள் குறைந்த கால இடைவெளியில் மனிதனின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. ஸ்மார்ட்போன்கள் எ

Advertisement

செல்போன்கள் குறைந்த கால இடைவெளியில் மனிதனின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. ஸ்மார்ட்போன்கள் என்று பல கட்டமாக மாறுபட்டு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும். கம்ப்யூட்டரில் செய்யும் அனைத்து வேலைகளையும் நம்மால் இப்பொழுது ஸ்மார்ட்போனில்செய்து முடிக்க முடியும். 

இதனால் மனிதர்கள் போனை தங்களது உடலின் ஒரு பாகம் போலவே கருதுகின்றனர். அனைவரும் செல்போன் வைத்திருப்பதால் பல நிறுவனங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே மக்களை தொடர்புகொண்டு வாடிக்கையாளர்களை அவர்களது பக்கம் ஈர்க்கின்றார்கள். 

ஆனால் செல்போன் அழைப்பால் பொதுமக்கள் படும் சிரமங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

தற்போது பொதுமக்களிடம் நூதன முறையில் கொள்ளையடிக்க ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. சார்... உங்கள் கிரிடிட் கார்ட், டெபிட் கார்டு நம்பர் கொடுங்கள் சார். என அரைகுறை இந்தி- தமிழில் பேசி சிலரை நம்ப வைத்து பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். அதனால் வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி, யாரிடமும் கிரெடிட் கார்ட் நம்பர், பின் நம்பர், OTP போன்றவற்றை யாரிடமும் பகிராதீர்கள் என அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். ஆனாலும் பலரும் இதுபோன்ற நூதன கொள்ளையர்களிடம் ஏமார்ந்து வருகின்றனர்.

அதையும் தாண்டி, தற்போது செல்போன்களுக்கு வரும் அழைப்புகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களை குறிவைத்து, தினமும் அதிகப்படியான அழைப்புகள் வருகின்றது. குறிப்பாக, சார்... கிரெடிட் கார்டு வேணுமா.? இன்சூரன்ஸ் வேணுமா.? இன்வர்ஸ்மண்ட் செயுறீங்களா.? டூர் பேக்கேஜ் வேணுமா.? என பல போன் அழைப்புகள் வருகின்றன.

முக்கிய வேலையாக, அலுவலகத்திற்க்கோ, மருத்துவமனைக்கோ, இன்டர்வீய்க்கோ   பலர் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது, திடீரென செல்போன் அழைப்பு வருவதால் வாகனத்தை ஓரம்கட்டி ஹெலோ யாரு அப்டினு கேட்டா.? சார் உங்களுக்கு நல்ல ஷேவிங் பிளான் இருக்கு.. கேக்குறீங்களா என சொல்லும்பொழுதே.. பிரஸர் அதிகப்படியாக ஏறும். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்பி விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்புகொள்ளுங்கள் என மெசேஜ் செய்தாலே விருப்பமுள்ளவர்கள் அவர்களை தொடர்புகொள்வார்கள். ஆனால் இவர்கள் நேரடியாக செல்போனுக்கு தொடர்புகொள்வது பலருக்கும் தொல்லையாகவே உள்ளது. இதனால் பலர் இதற்கு ஒரு முடிவே இல்லையா என சமூகவலைத்தளங்களில் புலம்பி தீர்க்கின்றனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cell phone #phone calll #torture
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story