ஹோட்டல் அல்லது ரோட்டு கடைகளில் சாப்பிடுபவரா நீங்கள்..? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு காத்திருக்கு! முக்கிய தகவல் உள்ளே..!
Problems of eating outside food in tamil

இன்றைய காலகட்டத்தில் சிலர் வீட்டில் சமைத்த உணவுகளை உண்பதைவிட ஹோட்டல்களில் சமைத்த உணவையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக திருமணம் ஆகாத பேச்சிலர் நபர்கள்தான் அதிகம்.
இதுபோன்று ரோடோர கடைகளில் சாப்பிடுவது, சுகாதாரமில்லாத ஹோட்டல்களில் சாப்பிடுவதால் பலவிதமான ஆபத்துகளை நாம் சந்திக்கின்றோம். அதில் ஒன்றுதான் அமீபா எனப்படும் நுண்ணுயிர் கிருமி. பெருங்குடலின் ஆரம்பப் பகுதியான சீக்கம் அல்லது பெருங்குடலின் முடிவு வளைவு பகுதியான சிக்மாய்டு ஆகியவற்றில் தங்கி புண்களை உருவாக்கிவிடும்.
இதைத்தான் தமிழில் சீதபேதி என்கின்றோம். மலம் கழிக்கும்போது பலவிதமான பிரச்சனைகளை இந்த கிருமி ஏற்படுத்துகிறது. மலம் சரியாக போகாது. கொஞ்சம் கொஞ்சமாக போகும். அப்படி போகும் போது வலியும் இருக்கும். முக்கி போக வேண்டியிருக்கும். சிலருக்கு மலத்தோடு ரத்தமும் வரும்.
சுத்தமில்லாத உணவுகளை சாப்பிடுவது, கண்ட இடங்களில் உள்ள தண்ணீரை அருந்துவது மேலும் ஹோட்டலில் சமைப்பவருக்கு அமீபியாசிஸ் கிருமி இருந்து அவர் சரியாக காய் கழுவாமல் சமைத்தாலோ அல்லது நீரினை தொட்டாலோ அந்த நீரை அருந்துபவருக்கும் அமீபியாசிஸ் கிருமி தொற்றிக்கொள்கிறது.
அமீபியாசிஸ் பெருங்குடலில் மலம் தேங்கிப் போகும் சிக்மாய்டு பகுதியை அதிகம் தாக்கும். பெருங்குடலின் வழுவழுப்புத் தன்மையை அமீபா கிருமி கெடுப்பதால் மலம் எளிதில் வெளியேற முடியாமல் அடைத்துக் கொள்ளும். இதனால்தான் மலம் கழிக்கும் போது அவதியும் வலியும் ஏற்படுகிறது.
இதை கவனிக்காமல் விட்டால் மலத்துடன் சேர்ந்து இரத்தமும் வெளியேறும். இதன் பாதிப்பு அதிகமாகும்போது பெருங்குடலில் கட்டி ஏற்படும். இதை சிலர் கேன்சர் கட்டி என நினைத்துக் கொள்வார்கள். அமீபா கிருமித்தொற்று அதிகமாவதால்தான் உருவாகிறது இந்தக் கட்டி. இதற்கு `அமீபோமா’ என்று பெயர்.
சிலருக்கு திடீரென்று அவரது எடையில் வித்தியாசம் ஏற்படும் 50 கிலோ இருக்கும் ஒரு நபர் திடீரென்று 10 முதல் 15 கிலோ வரை எடை குறைய வாய்ப்புண்டு. எனவே இனியாவது ரோடோர கடைகளில் சாப்பிடுவதையும், சுகாதாரமற்ற ஹோட்டல்களில் சாப்பிடுவதையும் தவிர்த்து சுத்தமான முறையில் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுங்கள்.
மேலும் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களும் அதிகம் பகிர்ந்து அவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.