×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சுவையான சூப்பரான உருளைக்கிழங்கு ஆம்லெட் செய்வது எப்படி...

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சுவையான சூப்பரான உருளைக்கிழங்கு ஆம்லெட் செய்வது எப்படி...

Advertisement

வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சுவையான சூப்பரான உருளைக்கிழங்கு ஆம்லெட் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
முட்டை - 5
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

 

முதலில் கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அத்தோடு, வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் தவாவை வைத்து சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும். பின் நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சூப்பரான சுவையான உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Potato amlet #Recipe #tamil
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story