நடக்க முடியாத நாய் குட்டியும், பறக்க முடியாத புறாவும் இணைய பிரியாத நன்பர்காளாக வாழும் சம்பவம்.! வைரல் வீடியோ.!
Pigeon and dog are friend video goes viral
பறக்க முடியாத புறா ஒன்றும், நடக்க முடியாத நாய் குட்டி ஒன்றும் இணைபிரியாத நண்பர்களாக மாறியுள்ள சம்பவம் பார்போபரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் ரோசெஸ்டர் நகரின் மியா என்னும் அறக்கட்டளையில் இந்த நாய் குட்டியும், புறாவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
புறாவின் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டால் அந்த புறாவால் பறக்க முடியவில்லை என கூறப்படுகிறது. அதே நேரம், நாய் குட்டியின் பின்னங்காலில் ஏற்பட்டுள்ள ஒருவிதமான பிறவி குறைபாட்டால் அந்த நாய் குட்டியால் நடக்க முடியவில்லை.
இந்நிலையில் ஹெர்மன் என பெயரிடப்பட்டுள்ள அந்த பூராவும், லுண்டி என பெயரிடப்பட்டுள்ள அந்த நாய் குட்டியும் எப்போது பார்த்தாலும் ஒன்றாகவே இருக்கிறார்களாம். எப்போதும் இணைபிரியாத நண்பர்களாக ஒன்றாகவே இருக்கும் இவர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.