×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுவையான பாதாம் அல்வா செய்வது எப்படி.!

சுவையான பாதாம் அல்வா செய்வது எப்படி.!

Advertisement

நாவில் சுவையை தூண்டும் அருமையான பாதாம் அல்வா செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
1. பாதாம் -1/2 கப்(இரவில் ஊற வைத்து காலையில் அரைத்தது)
2. சர்க்கரை -1/2 கப்
3. பால் -1 கப்
4. நெய் -1/2 கப் 
5. குங்குமப்பூ -சிறிதளவு

முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்து பின் 1/4 தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். அதனுடன் சர்க்கரையும் சேர்த்து கரைய விட வேண்டும். 

பின் அதில் பாதாம் பேஸ்ட் , பால், குங்குமப்பூ சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விட வேண்டும். அவ்வாறு கிளறி கொண்டே வரும் போது கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் அப்போது அதனுடன் பாதி அளவு நெய் சேர்த்து ஒரு 10 நிமிடம் கிளறி வரவும். 

நெய் முற்றிலும் வற்றியதும் அடுப்பை ஆப் செய்து விட்டு மீதமுள்ள நெய்யை சேர்த்து கிளறி விடவும்.அவ்வளவு தான் சுவையான பாதாம் அல்வா நொடியில் ரெடியாகி விடும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Padam alvaa #Recipe
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story