எறும்பு தொல்லையால் அவதியா?.. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து விரட்டலாம்.!
எறும்புகளை விரட்டியடிக்கும் சில எளிமையான வழிமுறைகள் குறித்து இந்த செய்திதொகுப்பில் காணலாம்.
சமையலறையில் மளிகை பொருட்கள் வைத்துள்ள பகுதிகளில் எறும்பு தொல்லை அதிகமாக இருக்கும். இதனைத் தடுக்க சில வழிமுறைகளை காணலாம்.
சமையல் அறையில் மளிகை பொருட்கள் வைத்துள்ள இடத்தில் எறும்புகள் எப்போதும் உணவு தேடி வந்து செல்வது வழக்கம். இதனை விரட்ட சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன. இயற்கை பூச்சி விரட்டியாக செயல்படும் வினிகரை தண்ணீருடன் கலந்து சமையல் அறையில் செல்ப் மற்றும் உணவு சேமிக்கும் டப்பாக்களில் வைத்தால் எறும்பு அந்த பக்கம் வராது.
எறும்பு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?
அதேபோல பிரியாணி இலை மற்றும் கிராம்பின் வாசம் எறும்புக்கு பிடிக்காது என்பதால் அதனை பல்பொருள்கள் இருக்கும் இடத்தில் ஆங்காங்கே போட்டு வைப்பது நல்லது. கதவு, ஜன்னல் பகுதியில் இருக்கும் விரிசல் வழியாக நுழையும் எறும்புகளை தடுக்க அந்த விரிசல்களை மூடுவது நல்லது.
சமையலறை சுத்தம் அவசியம்:
எலுமிச்சையின் சிட்ரஸ் வாசனை எறும்புகளுக்கு சுத்தமாக பிடிக்காது என்பதால் எலுமிச்சை சாறையும் அந்த இடத்தில் தெளிக்கலாம். சர்க்கரை, தானியம், மாவு போன்றவற்றை காற்று புகாத டப்பாவில் சேமித்தால் எறும்பு அந்த இடத்திற்கு வராமல் இருக்கும். சமையல் அறையை சுத்தமாக வைத்திருப்பதும், கீழே சிந்திய உணவை உடனடியாக அப்புறப்படுத்துவதும் நல்லது.
உணவு சிந்தாமல் சாப்பிடுங்கள்:
அதேபோல காபி பொடியின் வலுவான வாசனையும் எறும்புகளை விரட்டும். எறும்புகளின் நடுவே உப்பை தூவினால் அவை திசை திரும்பி வேறு இடத்திற்கு சென்று விடும். வீட்டை முடிந்தளவு சுத்தம் செய்து வைத்தல் அவசியம். தின்பண்டங்கள் சாப்பிடும்போது துகள்கள் கீழே சிந்தாதபடி சாப்பிட வேண்டும். எறும்புகள் வாசனை நுகர்ந்து வரும் என்பதால் சின்ன சின்ன விஷயங்களும் அவற்றின் கவனத்தை எளிதில் ஈர்க்கும்.