என்னடா இது இம்புட்டு பெரிய வாய்..! மனிதரின் வாயை வித்யாசமாக வியந்து பார்க்கும் குரங்கு..! வைரல் வீடியோ..!
Monkey open up human mouth and seeing video goes viral

என்னடா இது? இவ்வளவு பெரிய வாய்யா? என மனிதனின் வாய்யை குரங்கு ஒன்று வியந்து பார்ப்பதுபோல் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது மிகவும் வித்தியாசமாக நடைபெறும் நிகழ்வுகள் குறித்த வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் குரங்கு ஒன்று மனிதனின் வாய்யை மிகவும் வித்தியாசமாக பார்க்கும் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுமார் 20 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், மேசை மீது அமர்ந்திருக்கும் இரண்டு குரங்குகளில் ஒரு குரங்கு அருகில் இருக்கும் மனிதனின் வாய்யை திறந்து பார்க்கிறது, பின் அதனுடைய வாய்யை அளவிட்டு பார்க்கிறது. பின்னர் மனிதனின் வாய்யை திறந்து பார்க்கிறது.
இப்படி பலமுறை உங்கள் வாய் எனது வாயை விட வித்யாசமாக உள்ளதே என குரங்கு வியந்து பார்ப்பது போல் அந்த காட்சி அமைந்துள்ளது. இதோ அந்த காட்சி. நீங்களும் பாருங்கள்.