×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாட்ஸ் அப்பில் மணமகளை விளையாட்டாக திட்டிய மணமகனுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்கள்!

man send as idiot to his fiance fined

Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மணமகன் ஒருவர் தன்னுடைய மணமகளுக்கு வாட்ஸப்பில் விளையாட்டாக 'இடியட்' என அனுப்பியுள்ளார். இதனை தவறாக புரிந்து கொண்ட மணமகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் மணமகனுக்கு 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸப்பில் தனக்கு நெருக்கமானவர்களிடம் சகஜமான வார்த்தைகளால் பேசுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இதனை அனைவரும் சகஜமாக எடுத்துக் கொள்வதில்லை. சிலர் மனதளவில் அந்த வார்த்தைகள் தங்களை புண்படுத்தி விடுவதாக எண்ணுகின்றனர். அதைப்போன்று விளையாட்டாக தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மணமகன் அனுப்பிய வார்த்தைதான் விபரீதமாக முடிந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தன்னுடைய வருங்கால மனைவியிடம் வாட்ஸப்பில் பேசிக்கொண்டிருந்த போது அந்த மணமகன் விளையாட்டாக அந்த பெண்ணிற்கு அரபு மொழியில் 'habla' என அனுப்பியுள்ளார்.இதற்கு ஆங்கிலத்தில் 'இடியட்' என்பது அர்த்தமாகும். இதனைத் தொடர்ந்து அந்த பெண் அவர் தன்னை அவர் திட்டிவிட்டதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் மணமகனுக்கு 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நம் இந்திய நாட்டின் சமூக வலைதளங்களில் நாம் ஒருவரை எந்த அளவிற்கு மோசமாக வேண்டுமானால் பேசலாம். அதற்கு எந்தவித தண்டனையும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் வளைகுடா நாடுகளில் அப்படி இல்லை. அங்கு சமூக வலை தளங்களில் கூட மக்கள் மிகவும் கவனமாக பேச வேண்டும். இதைப் போன்ற செயல்கள் சைபர் க்ரைம் மூலம் மிகவும் கடுமையாக தண்டிக்கப்படுகிறது.

இதேபோன்று தான் சில நாட்களுக்கு முன்பு அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு நபர் மற்றொரு பெண்ணுக்கு தவறான வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் அந்த பெண் தொடுத்த வழக்கில் அந்த நபருக்கு ஜெயில் தண்டனையும் இரண்டு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Whatsapp #idiot #UAE
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story