×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பழைய சாதம் மிஞ்சிருச்சா?.. இப்படி செஞ்சி பக்கோடா போட்டு அசத்துங்க..!

பழைய சாதம் மிஞ்சிருச்சா?.. இப்படி செஞ்சி பக்கோடா போட்டு அசத்துங்க..!

Advertisement

பழைய சாதத்தை வைத்து சூப்பரான வெங்காய பக்கோடா எப்படி செய்வது என்பது குறித்து தற்போது காண்போம்.

தேவையான பொருட்கள் :

முட்டை - 2
கடலை மாவு - 1/2 கப்
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கேற்ப
பழைய சாதம் - 1 கப்
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/4 தேக்கரண்டி
துருவிய கேரட் - 1
பெருங்காயத்தூள் - சிறிதளவு

செய்முறை :

★முதலில் பழைய சாதத்துடன், இரண்டு முட்டை சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும்.

★பின் இந்த கலவையுடன் கடலை மாவு, வெங்காயம், மிளகாய் தூள், மல்லி தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

★அவற்றை நன்றாக கலந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

★அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்த கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்

★நன்றாக சிவந்து வந்தபின் பொரித்த பக்கோடாவை எடுத்து பரிமாறினால் சுவையான வெங்காய பக்கோடா தயார் ஆகிவிடும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cooking tips #Ladies Corner
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story