பட்ஜெட் குறைவாக இருந்தாலும், பயணம் சிறப்பாக இருக்கும்.. தமிழகத்தில் ஊர்ச்சுற்ற சிறந்த தளங்கள்.!
பட்ஜெட் குறைவாக இருந்தாலும், பயணம் சிறப்பாக இருக்கும்.. தமிழகத்தில் ஊர்ச்சுற்ற சிறந்த தளங்கள்.!
வாழ்க்கைக்கு பயணங்கள் மிகவும் முக்கியமானது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து சிறிது இடைவெளி எடுத்து கொண்டு, நாம் கண்டிராத இடத்தினை நோக்கி பயணிக்கையில் புதிய மனிதர்கள், புதிய இடங்கள், புதிய அனுபங்களைக் கொடுக்கும்.
பயணங்கள் ஏன் அவசியம்? :
மேலும், வெவ்வேறு இடங்களுக்கு புதிதாக செல்கையில் அந்த ஊரின் உணவு, மக்கள் மற்றும் கலாச்சாரம் என பலவும் நமக்கு நல்ல ஒரு புத்துணர்ச்சியைக் கொடுப்பதுடன், வாழ்வின் ஒரு புதிய அர்த்தத்தையும் கொடுக்கிறது. பயணங்களின் மூலம் நம்முடைய மனஅழுத்தத்திலிருந்து விடுதலை கிடைப்பதுடன், அடுத்த ஓட்டத்திற்க்குத் தேவையான உற்சாகம் நமக்கு ஏற்படுகிறது.
இதையும் படிங்க: காலையில் எழுந்ததும் இந்த 2 பொருட்களை தொட்டால் வீட்டில் பணம் பெருகுமாம்! இதை மட்டும் எழுந்தவுடன் தொடவே கூடாதாம்! இனி தெரிஞ்சுகோங்க...
வேலைப்பளுவின் காரணமாக வாழ்வில் ஒரு சலிப்பு ஏற்படும் வேளையில் நமக்கு பயணங்கள் உத்வேகத்தைக் கொடுக்கிறது. நண்பர்களுடன், குடும்பத்திரனருடன் என வருடத்திற்கு 2 முறையாவது நாம் நமக்காக செலவழிக்கையில் மனமும், உடலும் ஒன்றாக நலமாகிறது.
பட்ஜெட்டுக்குள் பயணம் :
சென்னை மக்களுக்கு முத்தாய்ப்பாக அருகிலே இருக்கும் மகாபலிபுரத்தில் எண்ணற்ற சிற்பங்கள், கல்வெட்டுகள், வரலாற்று தூண்கள், கற்கோவில்கள் மற்றும் அருமையான கடற்கரை என கண்களுக்கு விருந்தாகும் இடமாக மஹாபலிபுரம் திகழ்கிறது.
ஆனால், ஆடம்பரமாக நம் கையை மீறி செலவழிக்காமல், பணத்தினை சேமித்து வைத்து, குறைவான பட்ஜெட்டில் நிறைவான மகிழ்வினை அடைய வேண்டும். குறைவான பட்ஜெட்டில் குழந்தைகளுடன், நண்பர்களுடன் செல்வதற்கு மிகச் சிறந்த இடம் புதுச்சேரி. நம் இந்திய நாட்டினை ஆட்சி செய்த, பிரெஞ்சு கலாச்சாரத்தின் அடையாளங்களைத் இன்றைக்கும் தாங்கி நிற்கும் புதுச்சேரி, அழகான கடற்கரைகள், சுற்றுலா இடங்கள் மற்றும் கடைவீதிகளுடன் குறைந்த செலவில் சுற்றிப் பார்க்க ஏற்ற இடமாகும்.
மாம்பழத்திற்கு பெயர்போன நம் சேலத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள ஏற்காடு. குறைவான பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் எளிய உணவு விடுதிகளுடன் அமையப்பெற்றுள்ளது. மேலும் நல்ல குளுகுளு'வென அமைந்திருப்பதால் இது சுற்றுலா செல்வோரை வெகுவாக கவருகிறது.
ஊட்டி, கொடைக்கானல் போன்றவை எப்பொழுதும் மக்களுக்கு மிகவும் பிடித்த பல சிறப்பம்சங்கள் கொண்ட இடம். பொழுதுபோக்கு பூங்காக்கள், குழந்தைளுக்கு தனி பூங்காக்கள், குதிரை சவாரி, பூக்களின் பூங்கா ,சாக்லேட் தொழிற்சாலை மற்றும் படகு சவாரி என இதன் சிறப்பம்சங்கள் எண்ணிலடங்காது.
கூட்டம் இல்லாத,அமைதியான இயற்கை எழில் சூழும் இடத்திற்கு செல்ல வேண்டுமெனில் மாஞ்சோலை நல்ல தேர்வு ஆகும்.
அடுத்து நம் மாநிலத்தை தாண்டி, கோவா ,இமாச்சலப் பிரதேசத்தின் இதயமான தரம்சாலா, அழகான சிறிய விடுதிகள், சுவையான உணவு மற்றும் புகழ்பெற்ற டார்ஜிலிங், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இளஞ்சிவப்பு நகர் ஜெய்ப்பூர், மற்றும் பனி படர்ந்த மரங்கள், மலைகள், பைன் காடுகள் கொண்ட கசோல் போன்றவை கட்டாயம் சுற்றுலா விரும்பிகள் குறைந்த செலவில் சென்று பார்க்கவேண்டிய இடங்கள்.
வாழ்க்கையில் மனிதனாய் எண்ணற்ற பணிச்சுமைகளுடன் பணம் நோக்கி ஓடும் நமக்கு இந்த பயணங்கள் நிச்சயம் மேலும் மனதிற்கு வலு சேர்க்கும் என்பதை மனதில் வைத்து, பயணம் செய்வோம், மனநலம் காப்போம்.
இதையும் படிங்க: வீட்டில் விஷப்பாம்புகள் நுழைய கூடாதா? இந்த நான்கு பொருட்கள் வீட்டில் இருந்தா போதும்! எட்டிக்கூட பார்க்காது...