×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்கள் வீட்டில் பல்லி தொல்லையா.. இனி கவலை வேண்டாம்.. தீர்வு வந்தாச்சு..!

உங்கள் வீட்டில் பல்லி தொல்லையா.. இனி கவலை வேண்டாம்.. தீர்வு வந்தாச்சு..!

Advertisement


பல்லிகள் என்பவை ஊர்வன வரிசையை சேர்ந்த ஒர் உயிரினம் ஆகும். இவைகள் மொத்தம் 6000 இனங்களுக்கு மேல் உள்ளன என சொல்லப்படுகிறது. இந்தப் பல்லி இனங்கள் அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகிறதாம்.

இன்று நாம் வாழும் வீட்டை நாம் எவ்வளவுதான் சுத்தமாக வைத்துக் கொண்டாலும் வீட்டு சுவர்களில் பல்லிகள் நடமாடுவதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடுகிறது. மேலும் இந்த பல்லிகள் பார்ப்பதற்கு அருவருக்கத்தக்கதாகவும் பயத்தை ஏற்படுத்தக் கூடியவனாகவும் இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் இந்த பள்ளிகள் நாம் உண்ணும் உணவில் தவறி விழுந்தால் நம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

இப்பேற்பட்ட பள்ளிகளை நம் வீட்டில் இருந்து அகற்றுவதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். அவை 1) ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி காபித்தூள் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சிறு சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். பின்பு இதனை பல்லிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் வைத்தால் உடனே பள்ளிகள் இறந்துவிடும்.

2) ஒரு பூண்டை முழுமையாக எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும். இவ்வாறு கலக்கிய கலவையை பல்லிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் தெளித்தால் இந்த வாடைக்கு பள்ளிகள் உடனே வீட்டை விட்டு வெளியேறிவிடும்.

3) ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு டெட்டால் சேர்க்கவும். இதனை தொடர்ந்து ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து
அதனை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு எடுத்த சாற்றை டெட்டால் கலந்து வைத்துள்ள தண்ணீரில் சேர்க்கவும். பின்பு அதனுடன் ஒரு எலுமிச்சை பழச்சாறு  சேர்க்கவும். இவ்வாறு சேர்த்து கலக்கிய கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு பல்லிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் தெளித்து வந்தால் அவை உடனே வீட்டை விட்டு வெளியேறி விடும். இவ்வாறு நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் பல்லிகளை எளிதாக விரட்டி விடலாம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lizard problem #Home #solution
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story