வெறும் 24 ரூபாய் முதலீடு 50 லட்சம் ஆகுமாம்......! எல்ஐசியின் அதிரடி ஆயுள் காப்பீடு திட்டம்.... முழு விவரம் இதோ!!!
எல்ஐசியின் யுவா டெர்ம் திட்டத்தில் ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை காப்பீடு பெறலாம். வயது, காலம், பிரீமியம் முறைகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இங்கே.
குடும்பத்தின் எதிர்கால நிதிப் பாதுகாப்புக்காக ஆயுள் காப்பீடு எடுப்பவர்களின் கவனம் தற்போது டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் மீது திரும்பியுள்ளது. அந்த வகையில், எல்ஐசியின் ‘யுவா டெர்ம்’ திட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்ய முடியும். இது சேமிப்புத் திட்டம் அல்ல; காப்பீட்டாளரின் மறைவுக்குப் பிறகு குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் திட்டமாகும்.
18 முதல் 45 வயது வரை பெறலாம்
எல்ஐசி வெளியிட்டுள்ள தகவலின்படி, 18 முதல் 45 வயது வரையிலானவர்கள் இந்தத் திட்டத்தை பெற தகுதியுடையவர்கள். தேர்வு செய்யும் பாலிசி காலம் மற்றும் பிரீமியம் செலுத்தும் முறையைப் பொறுத்து திட்டத்தின் அமைப்பு மாறுபடும்.
இதையும் படிங்க: சிறுநீரகக் கல் பிரச்சினையா? வீட்டிலேயே பின்பற்றக்கூடிய எளிய டிப்ஸ்!
வழக்கமான முறையில் பிரீமியம் செலுத்துவது மட்டுமின்றி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் பிரீமியம் செலுத்தும் வரையறுக்கப்பட்ட கால முறை மற்றும் ஒரே தவணையில் செலுத்தும் முறை போன்ற விருப்பங்களும் உள்ளன.
ரூ.50 லட்சம் காப்பீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.8,750?
எல்ஐசியின் கணக்கீட்டின்படி, 30 வயதுடைய ஒருவர் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையுடன் 20 ஆண்டு பாலிசி காலத்தையும், 10 ஆண்டுகள் பிரீமியம் செலுத்தும் முறையையும் தேர்வு செய்தால், ஆண்டுக்கு ரூ.8,750 பிரீமியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தினசரி கணக்கில் பார்த்தால் இது சுமார் ரூ.24 ஆகும்.
ஆனால், இதை அனைவருக்கும் பொருந்தும் ஒரே பிரீமியம் என எடுத்துக்கொள்ளக்கூடாது. வயது, பாலிசி காலம், புகைப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உண்மையான பிரீமியம் மாறுபடலாம்.
இது சேமிப்புத் திட்டம் அல்ல
“தினமும் ரூ.24 செலுத்தினால் ரூ.50 லட்சம் கிடைக்கும்” என்று யுவா டெர்ம் திட்டத்தை சேமிப்புத் திட்டமாக புரிந்துகொள்வது தவறு. இது முழுமையான டெர்ம் காப்பீடு என்பதால், பாலிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு காப்பீட்டாளர் உயிரிழந்தால் மட்டுமே நாமினிக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
பாலிசி காலம் முடியும் வரை காப்பீட்டாளர் உயிருடன் இருந்தால், பொதுவாக முதிர்வு தொகை கிடைக்காது. எனவே, திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன்பு எல்ஐசியின் அதிகாரப்பூர்வ விதிமுறைகள், தகுதி நிபந்தனைகள் மற்றும் தனிப்பட்ட பிரீமியம் கணக்கீட்டை சரிபார்ப்பது அவசியம்.
இதையும் படிங்க: பருக்கள், கருவளையம் தொல்லையா? முகம் பளிச்சென மாற இதோ எளிய வழிகள்!