×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல வருட வழக்கு... நீண்ட கால போராட்டதுக்கு முற்றுப்புள்ளி! ஜான்சன் -ஜான்சனின் மிகப்பெரிய நஷ்டஈடு அறிவிப்பு!!!

ஜான்சன் & ஜான்சன் டால்கம் பவுடர் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட சுமார் 69,000 வழக்குகளை முடிக்க 5.5 பில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

Advertisement

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு எதிரான டால்கம் பவுடர் வழக்குகளில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட சுமார் 69 ஆயிரம் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நிறுவனம் 5.5 பில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

69 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு முயற்சி

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர் உள்ளிட்ட தயாரிப்புகளை பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக ஆயிரக்கணக்கானோர் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களை நாடியிருந்தனர். இந்த அனைத்து வழக்குகளையும் ஒரே கட்டமாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுமார் 5.5 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.52,000 கோடி, நஷ்டஈடு வழங்க நிறுவனம் சம்மதித்துள்ளது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் செயலிக்கு தடை... பயனர்களுக்கு ஷாக்.. அமலான உத்தரவு.!

நீண்டகால சட்டப் போராட்டம்

டால்கம் பவுடரில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பதாகக் கூறி, உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இதனால் நிறுவனம் தொடர்ந்து சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.

சட்டச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி

தகவலின்படி, நீண்ட காலமாக இழுபறியில் இருந்த வழக்குகளை சுமுகமாக முடித்து, சட்டப் போராட்டத்திற்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த மிகப்பெரிய நஷ்டஈட்டு ஒப்பந்தத்தை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: #BREAKING: பாஜகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகிய அண்ணாமலை! ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கட்சி தலைமை...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Johnson & Johnson #டால்கம் பவுடர் #Ovarian Cancer #நஷ்டஈடு #Lawsuit
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story