தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்லடைப்பு பிரச்சனையா..? இதோ உங்களுக்கான தீர்வு.. மருத்துவம் நிறைந்த வாழைத்தண்டு சூப்.. சுவையாக செய்வது எப்படி..?

கல்லடைப்பு பிரச்சனையா..? இதோ உங்களுக்கான தீர்வு.. மருத்துவம் நிறைந்த வாழைத்தண்டு சூப்.. சுவையாக செய்வது எப்படி..?

is-it-a-problem-with-stones-here-is-your-solution-medic Advertisement

இன்றைய நவீன உலகில் முறையற்ற உணவு பழக்க வழக்கங்களினாலும் மாறிவரும் வாழ்வியல் முறைகளினாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் சிறுநீரக கல் பிரச்சனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த சிறுநீரக கல்லடைப்பு பிரச்சனையை இயற்கையான வழியில் குணப்படுத்த வாழைத்தண்டு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் இந்த வாழைத்தண்டின் மகத்துவம் அநேக பேருக்கு தெரியாத காரணத்தினால் அதனை அந்த அளவிற்கு யாரும் விரும்பி உணவில் எடுத்துக் கொள்வதில்லை. மேலும் வாழைத்தண்டில் மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனை நம் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் சிறுநீரக கல்லடைப்பு பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Stone problem

 சூப் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
  வாழைத்தண்டு,சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, உப்பு, கொத்தமல்லி தழை.

செய்முறை:
1)முதலில் வாழைத்தண்டை நறுக்கி சுத்தம் செய்து மோரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.2) ஒரு குக்கரில் நறுக்கி ஊறவைத்துள்ள வாழைத்தண்டை சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விடவும். 3) பின்னர் விசில் அடங்கியதும் குக்கரில் உள்ள வாழைத்தண்டு மற்றும் தண்ணீரை தனித்தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும்.

4) இதனையடுத்து தனியாக எடுத்து வைத்துள்ள வாழைத்தண்டை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும், 5) பின்னர் அடுப்பில் கடாய் வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். 6)அதேசமயம் மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு மற்றொரு கடாயில் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் கலக்கவும்.

7) பின்னர் அந்தக் கலவையில் சீரகத்தூள், உப்பு, மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்‌. இந்த சூப்பை வாரம் ஒரு முறை பருகினால் நம் உடலில் உள்ள சிறுநீரக கற்கள் கரைந்து வலியிலிருந்து விடுதலை பெற முடியும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Stone problem #Banana stem soup #Make it delicious
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story