என்ன செஞ்சாலும் கழிவறை துர்நாற்றம் போகலயா? இதை ட்ரை பண்ணுங்க! ஒரே வாரத்தில ரிசல்ட் கிடைக்கும்!
How to remove bad smell from bathroom with home remedies

சிலரது வீட்டில் என்னதான் விலை உயர்ந்த பொருட்களை கொண்டு கழிவறையை சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் நாற்றம் போகவே போகாது. அவ்வாறு உள்ள கழிவறைகளை வீட்டில் உள்ள சாதாரண பொருட்கள் கூண்டு எளிதில் சுத்தம் செய்யலாம்.
ஒரு எலுமிச்சை பலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் சாறை பிழிந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன் கழிவறையும் சிங்கிலியும் தெளியுங்கள். பின்பு நன்கு ஊறவைத்து கழுவுங்கள். இவாறு செய்வதன் மூலம் கழிவறையில் உள்ள துர்நாற்றம் எளிதில் மறையும்.
மற்றும் ஒரு எளிய வழி என்னவென்றால், பேக்கிங் சோடாவை ஒரு பாக்கெட்டில் நீர் ஊறி அகில் நன்கு கலக்கி கொள்ளுங்கள். வரம் இரு முறை இந்த நீரை கொண்டு கழிவறையை சுத்தம் செய்யுங்கள். வித்தியாசத்தை நீங்களே காண்பீர்கள்.
வினிகர் கருப்பு அல்லது ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து கழிவறையை சுத்தம் செய்யலாம். இதனால் கழிவறையில் உள்ள துர்நாற்றம் மட்டுமின்றி, அழுக்குகளும் முழுமையாக போய்விடும்.
நல்ல நறுமணமிக்க சோப்பு தூளை நீரில் கலந்து, அந்த சோப்பு நீரை கொண்டு கழிவறையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கழுவினால், கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.