மழை காலத்தில் துணிகளில் நாற்றம்.. காயவைக்க சிரமம்.. இதோ எளிய தீர்வுகள்.!
மழை காலத்தில் துணிகளில் நாற்றம்.. காயவைக்க சிரமம்.. இதோ எளிய தீர்வுகள்.!
தொடர்ந்து மழை பெய்யும் காலங்களில் துணிகளை காயவைப்பது மிக பெரிய சிரமமாக மாறுகிறது. குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நேரம், அலுவலகத்திற்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஈரமான துணிகள் துர்நாற்றத்துடன் இருப்பது மிக பிரச்சனையாக உள்ளது. மழை காரணமாக காற்றில் அதிக ஈரப்பதம் உருவாகுவதால் துணிகள் சீக்கிரம் உலர்வதில்லை.
இதனைத் தவிர்க்க துணிகளை துவைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்தால், துணிகள் விரைவாக உலருவதோடு, அதிலிருந்து வரும் துர்நாற்றமும் குறையும். காற்றோட்டம் நன்றாக இருக்கும் இடத்தில் துணிகளை விரித்து உலர்த்துவது நல்லது. மழைக்காலத்தில் ஜீன்ஸ், கம்பளி போர்வைகள் போன்ற கனமான துணிகளை அதிகமாக துவைக்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகின்றது.
இத்தகைய துணிகள் நீண்ட நேரம் ஈரமாய் இருப்பதால் பூஞ்சை உருவாகும் வாய்ப்பு அதிகம், அதுவே தோல் அரிப்பு மற்றும் துர்நாற்றத்தை உருவாக்கக் கூடியது. மேலும, வீட்டினுள் துணிகளை உலர்த்துவதால் அறையின் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால், துணிகளில் துர்நாற்றம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: உங்கள் வீட்டு ஃபிரிட்ஜில் தக்காளி உள்ளதா? அப்போ இத கண்டிப்பா படிங்க....
இதைத் தவிர்க்க, ஒரு துணியில் கல் உப்பை கட்டி அறையில் தொங்க விடலாம்; இது காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்ச உதவும். துவைக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது யூக்லிப்டஸ் எண்ணெய் சேர்த்தாலும் நல்ல வாசனை நிலைத்து நீடிக்கும். இந்த எளிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மழைக்காலத்திலும் துணிகளை நன்றாக பராமரித்து, துர்நாற்றமின்றி சுத்தமாக பயன்படுத்த முடியும்.