தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முகத்தை அழகாக்கும் கண் கண்ணாடியை எப்படி தேர்வு செய்வது தெரியுமா? இதெல்லாம் பார்த்து தான் கண்ணுக்கு கண்ணாடி போடணுமாம்! இனி தெரிஞ்சுக்கோங்க....

முக அமைப்புக்கு ஏற்ப சரியான கண் கண்ணாடியை தேர்வு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் எளிமையாக அறிந்து கொள்ளலாம்.

how-to-choose-right-eyeglasses-tamil-guide Advertisement

கண் கண்ணாடியை தேர்வு செய்வது எப்படி

இன்றைய உலகில் கண் பார்வை குறைபாடு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பரவலாக உள்ளது. இதனால் மருத்துவர்கள், பார்வையை சரிசெய்ய கண்ணாடி அணிய பரிந்துரைக்கின்றனர். ஆனால், உங்கள் முக அமைப்புக்கு ஏற்ப கண்ணாடியைத் தேர்வு செய்வது முக்கியம்.

ஏன் சரியான கண்ணாடி தேர்வு முக்கியம்

முகத்திற்கு பொருத்தமான கண்ணாடி தான் உங்கள் தோற்றத்தையும் நம்பிக்கையையும் உயர்த்தும். தவறான தேர்வு, முக அழகை பாதிக்கும் என்பதும் உண்மை. சரியான அளவு, வடிவம் மற்றும் ஃபிரேம் தேர்வு முக்கியமானவை.

 

கண் கண்ணாடி

உங்கள் முக அளவினை கணக்கிடுவது எப்படி

முதலில் உங்கள் மூக்கின் அகலம் சரியாக உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள, ஒரு ATM கார்டை மூக்கு மேல் வைக்கவும்.

இதையும் படிங்க: கோடை வெயிலிலும் துளசி செடி செழிப்பாக வளரணுமா? கற்றாழை ஜெல்லுடன் இந்த பொருட்களை சேர்த்து பாருங்க செடி முழுக்க இலை தான்....

கார்டு கண்களுக்கு மறைந்தால் – பெரிய அளவு (L)

கார்டும் கண்களும் சமமாக இருந்தால் – நடுத்தர அளவு (M)

கார்டு சிறிதாக இருந்தால் – சிறிய அளவு (S)

முக அமைப்புக்கு ஏற்ற கண்ணாடி வகைகள்

சதுர முக அமைப்பு

பரந்த நெற்றி மற்றும் செம்மையான கன்னெலும்புகள் உள்ளவர்களுக்கு வட்ட வடிவ அல்லது டி ஷேப் கண்ணாடிகள் பொருத்தமாக இருக்கும். ஏவியேட்டர் ஷேப் முகத்தை மென்மையாகக் காட்டும்.

வட்ட முக அமைப்பு

இந்த முக அமைப்பிற்கு வட்ட கண்ணாடிகள் பொருத்தமல்ல. பதிலாக, நீளமான செவ்வக அல்லது ரெட்ரோ ஸ்டைல் கண்ணாடிகள் சிறந்த தேர்வாகும்.

நீள்வட்ட முக அமைப்பு

இந்த முகத்திற்கு பெரிய சதுர அல்லது செவ்வக வடிவ கண்ணாடிகள் ஏற்றவையாக இருக்கும். இது முக அமைப்பை சிறப்பாக வெளிப்படுத்தும்.

இதய வடிவ முக அமைப்பு

இதய வடிவ முகத்திற்கு ஏவியேட்டர் வகை, ரிம்லெஸ் பிரேம்கள் பொருத்தமாக இருக்கும். மெல்லிய உலோக அல்லது பிளாஸ்டிக் ஃபிரேம்கள் முக அழகை மேம்படுத்தும்.

சரியான லென்ஸ் அமைப்பு

எந்தவொரு ஃபிரேமிலும், லென்ஸின் கீழ்பகுதி உங்கள் கண்களின் அளவுக்கு ஏற்ப பரபரப்பாக இருக்க வேண்டும். இது பார்வை வசதியையும் தரும்.

உங்கள் முக அமைப்பையும், பயன்பாட்டு தேவையையும் பொருத்து கண்ணாடி தேர்வு செய்வது உங்கள் தோற்றத்தையும் நம்பிக்கையையும் உயர்த்தும். சிறந்த ஐவியர் ஸ்டைல் தேர்வுகள் உங்கள் தினசரி வாழ்க்கையை வசதியாக மாற்றும்.

இதையும் படிங்க: மத்தி மீன் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அற்புதங்களை பாருங்க ! பார்த்து பயன்பெறுங்கள்......

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கண் கண்ணாடி #eyewear styles #முக அமைப்பு கண்ணாடி #best glasses for face shape #rimless frame
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story