×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பட்டாசு வெடிக்கப்போறிங்களா.! முக்கியமா இந்த விஷயத்தை மறந்துடாதீங்க.!

குழந்தைகளே பட்டாசு வெடிக்கப்போறிங்களா.! இந்த விஷயத்தை மனசுல வச்சுக்கோங்க.!

Advertisement

பட்டாசு வெடிக்கும் சமயத்தில், ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் ஒரு பாக்கெட் மணல் உள்ளிட்ட இரண்டும் அருகிலிருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். பட்டாசு வெடிக்கும் எல்லோரும் நிச்சயமாக காலணிகளை அணிந்து கொள்வது நல்லது.

பட்டாசு வெடிக்க தொடங்குவதற்கு முன்னதாக ஊதுபத்தி, மெழுகுவர்த்தி போன்றவற்றை பட்டாசுகளுக்கு அருகே வைக்காமல், சற்று தள்ளி வைத்திருப்பது மிக, மிக அவசியம். அதே போன்று, பட்டாசுகளை பற்றவைக்கும்போது முகத்தை கீழே குனிந்து கொண்டோ, முகத்தை அருகில் கொண்டு சென்றோ வைக்க கூடாது. அதே போன்று பட்டாசு வெடிக்கும் பெண்கள் தங்களுடைய தலைமுடியை நன்றாக கட்டிக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க தொடங்க வேண்டும்.

அதேபோல பட்டாசு வெடிக்கத் தொடங்கும்போது காட்டன் ஆடைகளை அணிந்து கொள்வது மிகவும் நன்று. பாட்டாசுகளை அருகில் வைத்தோ அல்லது கையில் வைத்தோ வெடிக்க கூடாது. மிகவும் பாதுகாப்பாக சற்று தொலைவிலிருந்து வெடிக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கவில்லை என எட்டிப் பார்ப்பது, அருகில் சென்று பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். மத்தாப்பு, புஸ்வானம் போன்றவை திடீரென்று வெடித்து விடும் அபாயமுள்ளது.

கிருமி நாசினியை பயன்படுத்திய பிறகு பட்டாசுகளை தயவு செய்து வெடிக்க வேண்டாம். தீக்காயம் ஏற்பட்டு விட்டால், உடனடியாக காயம் ஏற்பட்ட இடத்தை தண்ணீரில் நனைப்பது அவசியம். அதை விடுத்து எண்ணெய், பேனா இங்க் போன்றவற்றை அதில் ஊற்றுவது மிக, மிகத் தவறு. தீக்காயம் பட்டுவிட்டால், அதன் மீது காட்டன் துணிகளை வைக்க கூடாது. ஏனென்றால், அதிலுள்ள பஞ்சுகள் காயத்தில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது.

காயம் ஏற்பட்ட இடத்தை சுத்தமான துணியால் சுற்றிக்கொண்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது கொப்புளம் உண்டானால், அதை உடைக்கக்கூடாது.  உங்கள் மீது ஒருவேளை தீப்பற்றிக் கொண்டால், பதற்றத்தில் ஓடாமல், தரையில் படுத்து, உருண்டு அந்த தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.

மேலும் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், பட்டாசிலிருந்து வரும் புகையின் காரணமாக கண் சிவந்து விடுதல் போன்ற நிகழ்வு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம். இவை அனைத்தையும் தவறாமல் கடைபிடித்து, பாதுகாப்பாக பட்டாசுகளை வெடித்து, மகிழ்ச்சியாக தீபாவளியை அனைவரும் ஒற்றுமையோடு கொண்டாடுங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Diwali #diwali-2023 #Diwali Festival #Life style #Crackers
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story