×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடலுறவில் அதிக இன்பம் கிடைக்க என்னெல்லாம் செய்ய வேண்டும்? இத படிங்க!

How to be best in intercourse

Advertisement

ஆரோக்கியமான உடலுறவு தான் உறவுகளை சிறந்ததாக மாற்றும். உடலுறவு என்பது நமக்கு ஒருவித கொண்டாட்ட மனநிலையைத் தரக்கூடியது. அதை நாம் எவ்வாறு பயனுள்ளதாக மாற்றிக் கொள்கிறோம் என்பது ஒவ்வொருவரையும் பொருத்து மாறுபடும்.

சிலர் சந்தோஷமாக இருக்கும்போது தான் உடலுறவில் ஈடுபட வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் மன அழுத்தத்துடன் இருக்கும்பொழுது உடலுறவில் ஈடுபட்டால் மன அழுத்தம் வெகுவாகக் குறைந்துவிடும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உடலுறுவில் உச்சத்தை எட்டுவதற்கு நீங்கள் கஷ்டமான காம சூத்திர பொசிசன்களை எல்லாம் முயற்சி செய்ய வேண்டுமென்ற அவசியம் ஏதுமில்லை. கீழ்வரும் சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு, உடலுறவின் போது கடைபிடித்தாலே போதும், நீங்கள் அந்த விஷயத்தில் மிகப்பெரிய வெற்றியை கைக்கொள்ள முடியும்.
உடலுறவைப் பொருத்தவரையில் ஈகோ என்பதே இருக்கக் கூடாது.

அதற்காக உங்கள் துணையிடம் கெஞ்சவும் கூட தயங்கக் கூடாது. ஒருவேளை உங்கள் துணைக்கு நீங்கள் அழைக்கும் நேரத்தில் உடலுறவில் விருப்பம் இல்லாமல் இருந்தால் கூட, நீங்கள் அவர்களிடம் அதிக பணிவுடன் கெஞ்சிக் கேட்டு தாஜா பண்ணலாம்.

பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளுங்கள். அதுதான் இருவருக்குமே நல்லது. உங்கள் துணை ஞாபகப்படுத்தும்படி இல்லாமல், அதற்கு முன்னதாக நீங்களாகவே ஆணுறையோ கருத்தடை மாத்திரைகளோ பயன்படுத்தினால் உங்கள் துணைக்கு உங்கள் மேல் இன்னும் கொஞ்சம் அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#relationship #How to impress girls
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story