தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மல்லிகை பூவை எவ்ளவு நேரம் வரை தலையில் வைத்திருக்கலாம் தெரியுமா?

How long we can use flowers on head

How long we can use flowers on head Advertisement

பூவிற்கு மயங்காத பெண்கள் உண்டா? என்றால் யாரும் இல்லை. பொதுவாக பெண்கள் அனைவரும் தலையில் பூ வைப்பது வெறும் அலங்காரத்திற்காக மட்டும் அல்ல. அல்லது ஆண்களை கவர்வதற்காக என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு.

இவுலகில் படைக்கப்பட்ட கோடிக்கணக்கான மலர்களில் 25 சதவீத மலர்கள் மருத்துவத்துக்காகப் பயன்படுகின்றன. பெண்கள் தலையில் பூச்சூடுவதால் மனம் புத்துணர்ச்சி அடைவதுடன் பல்வேறு நோய்களையும் தீர்க்க முடியும்.

இவாறு தலையில் சூடும் மலர்கள் மூலம் என்னனா நோய்கள் குணமடையும் என்று பாப்போம்.

Flowers health tips

ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்த ரோஜா பூ உதவுகிறது.

மல்லிகைப்பூ – பொதுவாக அணைத்து விதமான பெண்களும் அணியும் ஒரே பூ மளிகை பூ. மல்லிகைப்பூ மூலம் மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

மகிழம்பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.

வில்வப்பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.

சித்தகத்திப்பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

தாழம்பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

தாமரைப்பூ – தாமரை பூவை தலையில் சூட்ட முடியுமா என்ற கேள்வி வருகிறதா? தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

கனகாம்பரம்பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ – போன்ற மலர்கள் வாதம், கபம் போன்றவற்றைச் சரிசெய்யும்.

அதேபோல் மலர்கள் சூடுவது உடலுக்கு ஆரோக்கியம் தானே என்று நினைத்து எல்லா மலர்களையும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வைத்திருக்கக்கூடாது.

ஒவ்வொரு மலரையும் குறிப்பிட்ட மணிநேரம்வரை மட்டுமே தலையில் சூட வேண்டும்.

எந்தெந்த மலரை எவ்வளவு மணிநேரம் வரை தலையில் வைத்திருக்கலாம்?…

முல்லைப்பூ – 18 மணி நேரம்

அல்லிப்பூ – 3 நாள்கள் வரை

தாழம்பூ – 5 நாள்கள் வரை

ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை

மல்லிகைப்பூ – அரை நாள் வரை

செண்பகப்பூ – 15 நாள்கள் வரை

சந்தனப்பூ – 1 நாள்கள் மட்டும்

மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ – சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ – இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Flowers health tips #Jamine flower health tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story