தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாதவிடாய் நாட்களிலும் முடிந்த அடுத்த நாளும் பெண்கள் என்னென்ன சாப்பிடணும் தெரியுமா? சாப்பிட்டால் இந்த பிரச்சனை வராதாம்! இனி தெரிஞ்சுக்கோங்க...

மாதவிடாய் நாட்களிலும் முடிந்த அடுத்த நாளும் பெண்கள் என்னென்ன சாப்பிடணும் தெரியுமா? சாப்பிட்டால் இந்த பிரச்சனை வராதாம்! இனி தெரிஞ்சுக்கோங்க...

hormonal-balance-diet-during-menstruation-for-women Advertisement

பெண்களின் ஹார்மோன் மாற்றங்களை எளிதாக சமாளிக்க உதவும் உணவுகள்

ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் காரணமாக, அதிகமான ஹார்மோன் மாற்றங்களை சந்திக்கின்றனர். இந்த மாற்றங்கள் உடல் மற்றும் மனநிலையை மட்டுமல்லாமல், கருவுறும் திறன் மற்றும் எலும்பு ஆரோக்கியம் வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

மாதவிடாய் ஹார்மோன் உணவு

ஹார்மோன் மாற்றத்தில் உணவின் பங்கு

மாதவிடாய் சுழற்சியின் முன்பும், நடுவிலும், பிறகும், பெண்கள் உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதற்கும், தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கும் முக்கியமாக பயன்படுகிறது.

மாதவிடாய் நாட்களில் எள்ளு அடங்கிய உணவுகள்

மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் முதல் 3 முதல் 4 நாட்கள் வரை, எள்ளில் செய்யப்பட்ட மிட்டாய், எள்ளுருண்டை போன்றவை இரும்புச்சத்தை ஈடு செய்யும். இது உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை வழங்கும். எள்ளு உணவுகள் உடலை சூடாக்கும் என்பது தவறான நம்பிக்கை.

இதையும் படிங்க: வீட்டில் பல்லி, கரப்பான்,எறும்பு தொல்லையை நீக்க இயற்க்கை முறையில் ஒரு சூப்பர் டிப்ஸ் இதோ! பார்த்து பயன்பெறுங்கள்...

மாதவிடாய் முடிவில் உளுந்து முக்கியம்

மாதவிடாய் முடிந்த பிறகு, அடுத்த 10 நாட்கள் பெண்களின் உடலில் கருமுட்டை வளர்ச்சி நடைபெறும். இக்காலத்தில் உளுந்து அடங்கிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உளுந்து வடை

உளுந்து தோசை

உளுந்தங் கஞ்சி

வறுத்து பொடி செய்த கருப்பு உளுந்து

உளுந்து ஒரு சிறந்த புரத உணவாகும் மற்றும் பெண்களின் சோர்வை குறைக்கும் திறன் உடையது.

கருமுட்டை கருக்குழாய்க்குள் வரும் கால கட்டத்தில் வெந்தயம்

15வது நாளுக்குப் பிறகு, கருமுட்டை கருக்குழாயில் நகரும் வேளையில், கருப்பை வலுப்படுத்தவும், அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும், வெந்தயம் அடங்கிய உணவுகள் அவசியமாகும்.

வெந்தயக் குழம்பு

வெந்தயப் பொடி

வெந்தயத் தேநீர்

வெந்தயம் மாதவிடாய் வலியைக் குறைக்கும் தன்மை கொண்டது. 15வது நாள் முதல் 28வது நாள் வரை அதை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் பயனுள்ளது.

சரியான உணவுக் கட்டமைப்பின் நன்மைகள்

பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சிக்கேற்ப,

முதல் 4 நாட்கள் எள்ளு,

அடுத்த 10 நாட்கள் உளுந்து,

பின்னர் வெந்தயம்

என உணவுகளை முறையாக தேர்ந்தெடுத்து எடுத்துக்கொண்டால், பல ஆரோக்கிய பிரச்சனைகள் தவிர்க்கப்படலாம். இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதோடு, உடலை சக்திவாய்ந்தவையாகவும் வைத்திருக்க உதவும்.

 

இதையும் படிங்க: குக்கர் கைப்பிடி அடிக்கடி கழண்டு வருதா? அப்போ இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மாதவிடாய் ஹார்மோன் உணவு #sesame ulundhu fenugreek health #
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story