×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மிகவும் பயனுள்ள டிப்ஸ்..குழந்தைகளுக்கு எந்தெந்த வயதில் எந்தவிதமான இறைச்சி வகைகளை சாப்பிட கொடுக்கலாம்...

மிகவும் பயனுள்ள டிப்ஸ்..குழந்தைகளுக்கு எந்தெந்த வயதில் எந்தவிதமான இறைச்சி வகைகளை சாப்பிட கொடுக்கலாம்...

Advertisement

குழந்தைகளுக்கு புரதம் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட கொடுப்பது மிகவும் பயனுள்ளது. புரதம் காய்கறி, பழங்களை விட இறைச்சி வகையில் தான் அதிகம் உள்ளது. அந்த வகையில் எந்த வயதில் குழந்தைகளுக்கு எந்த விதமான இறைச்சி வகைகளைசாப்பிட  கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.

முதல் 6 மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளின் உணவாக கொடுக்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு காய்கறிகள், பழங்களை கூழாகவோ, சூப்பாகவோ கொடுக்கலாம். 9 மாதத்திற்கு பிறகு இறைச்சி உணவான முட்டையை மட்டுமே பழக்க வேண்டும்.

கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது முட்டையில் புரதச்சத்து குறைவாக இருந்தாலும் அது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. குழந்தைக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுவதை முட்டையை வைத்தே பரிசோதித்துக்கொள்ளலாம்.

ஒரு வயதை கடந்த பிறகு குழந்தைகளுக்கு மீன், கோழி போன்ற இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சிறிதளவு சாப்பிட கொடுக்கலாம். ஆரம்பத்தில் கோழி இறைச்சியை குழம்பாகவோ, சூப்பாகவோ சாப்பிட கொடுக்க வேண்டும். அதன்பிறகு இறைச்சி துண்டுகளை மிக குறைந்த அளவில் கொடுக்கலாம்.

மீனையோ, இறைச்சியையோ அதிக அளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால், செரிமான மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். சிறுநீரகத்தின் இயக்கத்திலும் அசவுகரியம் ஏற்படக்கூடும்.ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவைகளை 5 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#healthy tips #Non veg #child
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story