×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Advertisement

கிராமப்புறங்களில் எளிதாக கிடைக்கும் சீதாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளது. அதன்படி சீதாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை கொடுக்கிறது.

எனவே சீதாப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். சீதா பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதன்படி எலும்புகள் வலுவாகவும், எலும்பு தேய்மானம் ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது.

சீதா பழத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

சீதாபழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல் சீதா படத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துகிறது.

சீதா பழத்தில் உள்ள நார் சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது. மேலும் சீதாப்பழத்தில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Food tips #Lifestyle #Seethapazham #Custard apple
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story