"மருத்துவ குணங்கள் கொண்ட கருப்பு உளுந்து!" எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
மருத்துவ குணங்கள் கொண்ட கருப்பு உளுந்து! எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

நம் ஒவ்வொரு வீட்டு சமையலறையில் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும் ஒரு பருப்பு வகை உளுந்து எனப்படும் கருப்பு உளுத்தம்பருப்பு. இட்லி, தோசை, வடை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இந்த கருப்பு உளுந்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றை இங்கு காண்போம்.
இது ஒரு ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மூட்டு மற்றும் தசை வலிகளுக்கு இந்த கருப்பு உளுந்தை பேஸ்ட் செய்து தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இது சிறுநீரைத் தூண்டி, சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள், யூரிக் அமிலம், கொழுப்புக்கள் ஆகியவற்றை வெளியேற்றுகிறது.
மேலும் இது வறண்ட தலைமுடியை சரிசெய்து, முடியின் பொலிவைக் கூட்டுகிறது. உளுந்து பேஸ்டை தலை முடியில் தடவினால், அது சிறந்த கண்டிஷனராக செயல்பட்டு முடியை பளபளப்பாக்குகிறது. மேலும் இது எலும்புகளை வலுவாக்குகிறது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது. இதில் உள்ள புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இதிலுள்ள இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்களுக்கு, ஹீமோகுளோபின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.