மக்களே இது விஷத்துக்கு சமம்! ஹோட்டல் முதல் டீக்கடை வரை...சாப்பாட்டு பார்சலில் வரும் எமன்! இப்படி சாப்பிடக் கூடாதுன்னு FSSAI கடும் எச்சரிக்கை...!!!
செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு FSSAI உத்தரவிட்டுள்ளது. அச்சு மை மற்றும் கிருமிகள் மூலம் உடல்நல பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உணவுகளை செய்தித்தாள்களில் மடித்து வழங்கும் நடைமுறைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. உணவகங்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் ஆன்லைன் கிச்சன்கள் உள்ளிட்ட அனைத்து உணவு விற்பனையாளர்களும் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை சம்பவத்தைத் தொடர்ந்து நடவடிக்கை
சமீபத்தில் மும்பையில் வடாபாவ் விற்பனையாளர் ஒருவர் உணவுப் பொருட்களை செய்தித்தாளில் மடித்து வழங்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து FSSAI மற்றும் மும்பை மாநகராட்சி இணைந்து ஆய்வு மேற்கொண்டு, நாடு முழுவதும் உணவு விற்பனையாளர்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.
அதிகாரிகள் கூறுகையில், செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் Printing Ink-ல் ஈயம் உள்ளிட்ட ஆபத்தான ரசாயனங்கள் மற்றும் கன உலோகங்கள் இருக்கக்கூடும். சூடான அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகள் நேரடியாக அதன் மீது வைக்கப்படும் போது, அந்த நச்சுப் பொருட்கள் உணவில் கலந்து உடலுக்குள் செல்லும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: 24 நாட்களுக்குள் நடக்கபோகும் நல்லது... தமிழக மக்களுக்கு CM விஜய்யின் ஹாப்பி நியூஷ்!!!
கிருமி பரவலுக்கும் வாய்ப்பு
செய்தித்தாள்கள் பலரது கைகளில் கைமாறி வருவதால், அவற்றின் மேற்பரப்பில் பல்வேறு கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு மூலம் பரவும் நோய்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகவலின்படி, 2018-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட Food Safety விதிமுறைகளின் கீழ், உணவுகளை சேமிக்கவோ பரிமாறவோ செய்தித்தாள்களை பயன்படுத்துவது ஏற்கனவே சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தெருவோர கடைகள் முதல் பெரிய உணவகங்கள் வரை அனைவரும் தரநிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட பேக்கிங் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கும் எச்சரிக்கை
கடந்த மே மாதம் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவுப் பாத்திரங்கள் அசுத்தமான முறையில் கையாளப்பட்டதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஐஆர்சிடிசி நிறுவனத்திற்கும் FSSAI நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செய்தித்தாள்களில் மடித்துத் தரப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பான பேக்கிங்கில் வழங்கப்படும் உணவுகளையே தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தைகளின் உயிருக்கே உலை வைக்கும் ஐஸ்கிரீம்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!!!