பழங்களில் ஏன் குறியீட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன தெரியுமா? அதன் அர்த்தங்கள் இதுதான்! இனி குறியீடு பார்த்து வாங்குங்க....
பழங்களில் ஒட்டப்படும் PLU ஸ்டிக்கர்கள் மூலம் அந்தப் பழம் கரிமமா அல்லது வேதியியல் முறையில் வளர்க்கப்பட்டதா என்பதை அறியலாம். வாங்கும் முன் இந்த குறியீடுகளை கவனிக்க வேண்டியது முக்கியம்.
நாம் அன்றாடம் வாங்கும் பழங்களில் காணப்படும் ஸ்டிக்கர்கள் வெறும் விலை குறியீடாக மட்டும் அல்லாமல், அந்தப் பழத்தின் பயிரிடும் முறையையே வெளிப்படுத்தும் முக்கிய தகவல்களைக் கொண்டுள்ளன. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க விழிப்புணர்வு அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பழ ஸ்டிக்கர்கள் ஏன் ஒட்டப்படுகின்றன?
பழங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் பாதுகாப்பான அடையாளத்துடன் விற்பனை செய்யப்படும் வகையில் உருவாக்கப்பட்டவை. இதில் அச்சிடப்பட்டுள்ள PLU குறியீடு பழம் எவ்வாறு வளர்க்கப்பட்டது என்பதைத் தெளிவாக தெரிவிக்கும். சில்லறை விற்பனையாளர்கள் செக் அவுட் செய்யும் போது விரைவான அடையாளத்திற்கு இந்த PLU அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
PLU குறியீட்டு எண்களின் அர்த்தம்
இந்தக் குறியீடு நான்கு அல்லது ஐந்து இலக்கங்களைக் கொண்டிருக்கும். 9 இல் தொடங்கும் ஐந்து இலக்க எண் இருந்தால் அது 100% கரிமமாக விளங்கும். ஆனால் நான்கு இலக்க எண் மட்டுமே இருந்தால், வழக்கமான ரசாயன முறை சாகுபடியில் இருந்து வந்தது என்பது உறுதி.
இதையும் படிங்க: போலி ஐபோன் கண்டுபிடிப்பது எப்படி? வித்தியாசத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
மரபணு மாற்றப்பட்ட பழங்களின் குறியீடு
சில நேரங்களில் 8 இல் தொடங்கும் ஐந்து இலக்க எண்கள் காணப்படும். இது அந்தப் பழம் மரபணு மாற்றப்பட்டதாக என்பதைக் குறிக்கிறது. ஆரோக்கிய அக்கறை கொண்டவர்கள் இந்த PLU குறியீடுகளை கவனித்து பழங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்த முறை நீங்கள் பழங்களைத் தேர்வு செய்யும் போது இந்தச் சிறிய ஸ்டிக்கர்களை கவனித்து பார்த்தால், உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற முடிவு எடுக்க முடியும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: உங்கள் வீட்டு வெங்காயத்தில் கருப்பு கோடுகள் இருக்கா? ஆபத்து மக்களே... அவசியம் தெரிஞ்சுக்கோங்க!