பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத 6 உணவுகள்! மருத்துவர்கள் எச்சரிக்கை..
பாலுடன் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் செரிமான கோளாறுகளையும் உடல் நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும் என ஆயுர்வேதம் எச்சரிக்கிறது.
ஆரோக்கியம் நிறைந்த பானங்களில் முதன்மையானது பால் ஆகும். இதில் கால்சியம், விட்டமின் டி, புரதம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. எலும்புகளின் வளர்ச்சிக்கு, பற்களின் வலிமைக்கு, நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் பால் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாலுடன் சேர்க்கக் கூடாத உணவுகள்
ஆயுர்வேதம் மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளின்படி, பாலை தவறான உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது செரிமானம் மற்றும் உடல் நலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
1. தயிர்
பாலுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவது அல்லது பால் அருந்திய பின்னர் உடனே தயிர் சாப்பிடுவது வயிற்று பிரச்சனைகள், முக்கியமாக அமிலத்தன்மை மற்றும் உள்வயிறு கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
இதையும் படிங்க: எச்சரிக்கை.! ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் கண்டிப்பாக குடிக்கக்கூடாது... ஏன் தெரியுமா.!?
2. சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, மோசம்பி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை பாலை அருந்திய பிறகு உடனே சாப்பிடக்கூடாது. இது வாந்தி, மயக்கம், அஜீரணம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறைந்தபட்சம் 2 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.
3. வாழைப்பழம்
பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், அஜீரண பிரச்சனை இருந்தால் தவிர்க்க வேண்டும். இந்த இணைப்பு செரிமானத்திற்கும் சோர்வுக்கும் வழிவகுக்கும்.
4. இறைச்சி மற்றும் முட்டை
புரதம் நிறைந்த உணவுகள் போல இறைச்சி மற்றும் முட்டை உடனே பாலை சேர்த்து எடுத்துக்கொள்வது செரிமான அமைப்பில் குழப்பத்தை உருவாக்கும். இது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
5. காரமான மற்றும் உப்பு நிறைந்த உணவுகள்
அதிக காரம் மற்றும் உப்பு கலந்த உணவுகளுடன் பாலை சேர்த்துச் சாப்பிடும்போது, அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படலாம். பாலில் உள்ள புரதம் செரியாமல் செரிமான கோளாறு ஏற்படும்.
6. மீன்
பால் ஒரு முழுமையான உணவாக இருந்தாலும், அதை எந்த உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்கிறோம் என்பதிலும் கவனம் தேவை. தவறான உணவு சேர்க்கைகள் நம் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதனை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்.
இதையும் படிங்க: தினமும் பழங்கள் சாப்பிடுபவர்களா நீங்கள்? இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..!