வானில் இருந்து பறந்து வந்த மீன் வலை! ஆச்சரியத்துடன் கீழே வேடிக்கை பார்த்த மக்கள்! இலங்கையில் பரபரப்பு.
Fish net comes from sky in Srilanka viral news
இலங்கையில் வானிலிருந்து மீன் பிடிக்கும் வலை ஒன்று பறந்து வந்து கீழே விழுந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையிலுள்ள சிலாபம் என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்ததாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். வானிலிருந்து மீன்பிடிக்கும் வலை ஒன்று பறந்து வந்ததாக கூறப்படும் அந்த பகுதியில் அட மழை பெய்துள்ளது. அப்பொழுது சுமார் 250 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட மீன் பிடிக்கும் வலை ஒன்று வானில் இருந்து கீழே பறந்து வந்ததை அங்கிருந்த மக்கள் சிலர் பார்த்ததாக கூறுகின்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது வானில் இருந்து பறந்து வந்த வலை சிலாபம் பகுதியை நோக்கி வருவதை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கீழே விழுந்த அந்த வலையை அங்கிருந்த சிலர் எடுத்துச் செல்ல முற்பட்டதாகவும் தெரிகிறது.
மேலும் அந்த வலையில் முடிச்சுகள் ஏதும் இல்லாத வகையிலும், கிழிந்து போனால் மீண்டும் தைக்க இயலாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற வலையை மீனவர்கள் அதிகம் பயன்படுத்துவது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வலையானது சீனா, தைவான் அல்லது இந்தியாவிற்கு சொந்தமானதாக இருக்கக்கூடும் என கூறுகின்றனர். மேலும் வானில் இருந்து பறந்து வந்து கீழே விழுந்த வலையை காண அந்த பகுதியில் மக்கள் கூட்டமாக கூடினர். இந்த வலை யாருடையது? எப்படி வானிலிருந்து பறந்து கீழே வந்து விழுந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.