ரம்முல பெப்பர் போட்டு சாப்பிடுங்க தலைதோஷம் போய்விடும் என சொல்லுவார்கள்! அதனால் ஏற்படும் பிரச்னை என்ன தெரியுமா?
dont drink alcohol in cold

தற்போதைய வாழ்க்கை முறையில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, அவர்களது வாழ்க்கையை சீரழித்து கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்காக பெண்களும், பல அரசியல் தலைவர்களும் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் மதுக் கடையை அரசாங்கமே நடத்தி வருகிறது. ஆனால் மது என்பது நமது அடுத்த தலைமுறையை அழிக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
மது அருந்திவிட்டு பெப்பருடன்(மிளகுத்தூளுடன்) ரம்மை சேர்த்து சாப்பிட்டால் தலை தோஷம் நீங்கும் என பலரும் கூறுவார்கள். அதிலும் சிலர் ராவா (தண்ணீர் கலக்காமல்) குடியுங்கள் என கூறுவார்கள். தயவுசெய்து இதுபோன்ற தகவல்களை கேட்டு யாரும் முயற்சி செய்யாதீர்கள்.
தண்ணீர் கலந்து மது அருந்தினாலே விரைவில் சாவு என்பது உறுதி. ஆனால் மதுவில் எதையும் கலக்காமல், அதில் மிளகுத் தூளைப் போட்டு சாப்பிட்டால் உங்கள் வயிற்றுக்குள் உள்ள அனைத்தும் விரைவில் பழுதாகிவிடும்.
எனவே தலை தோசம் பிடித்தாள் மருத்துவரை அணுகியோ, அல்லது இயற்கை வைத்தியமான துளசி, தூதுவளை என உள்ளிட்ட பல இயற்கை மருத்துவங்கள் உள்ளன அதனை கடைப்பிடித்து விரைவில் பயனடையுங்கள். மதுவை இதற்கு பயன்படுத்தி உங்களது குடும்பத்திற்கு துரோகம் செய்யாதீர்கள்.