பக்கத்துக்கு வீட்டில் என்ன நடக்குது.? எட்டிப் பார்க்கும் நாய்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!
Dog viewing another house video goes viral
பக்கத்துக்கு வீட்டில் என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார்கள் என தெரியாவிட்டால் தலையே வெடித்துவிடும் என பேச்சுவழக்கில் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். நிஜத்திலும் இதுபோன்று சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். பக்கத்துக்கு வீட்டுக்காரன் என்ன செய்கின்றான், என்ன பேசுகிறான் என்பதை தெரிந்துகொள்வதே அவர்களுக்கு தனி சுகம்தான்.
இது ஒருபுறம் இருக்க, தனது பக்கத்துக்கு வீட்டில் என்ன நடக்கிறது என நாய் ஓன்று எட்டி பார்க்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது. தடுப்பு சுவருக்கும், தென்னை மரத்துக்கும் இடையே தனது கால்களை நீட்டி, கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி பக்கத்துக்கு வீட்டை எட்டி பார்க்கிறது இந்த நாய்.
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரும் பல்துறைத் தொழில் குழுமங்களில் ஒன்றான ஆர்பிஜி குழுமத்தின் சேர்மன் Harsh Goenka இந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகிவருகிறது.