×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரவு நேரத்தில் செல்போன் பார்க்கும் பழக்கம் உள்ளவரா.? இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்.!!

இரவு நேரத்தில் செல்போன் பார்க்கும் பழக்கம் உள்ளவரா.? இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்.!!

Advertisement

தூக்கம் என்பது மனிதனுக்கு அவசியமான ஒன்று. ஒவ்வொரு மனிதனும் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு 6-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தூக்கம் என்பது உடல் சார்ந்ததோடு மட்டுமல்லாமல் மனதின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பதால் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் தூக்கமின்மை மன அழுத்தம் மற்றும் டிப்ரஷன் ஒன்றரை பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இரவில் குறைந்த நேரம் உறங்குபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் இரவில் தங்களது தூக்கத்தை இழக்கின்றனர். தங்கள் போன்களில் வீடியோக்கள் முக வலைத்தளம் மற்றும் ரீல்ஸ் அதிக நேரம் பார்ப்பதன் மூலம் நேரத்தை செலவிடுவதால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் செல்போனை இரவில் அதிக நேரம் பயன்படுத்துவது நமது தூக்கத்தை பாதிக்கும் என அமெரிக்காவைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இரவு நேரங்களில் செல்போனில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளியின் அளவு கூர்மையாக இருக்குமாம். இந்த ஒளியானது நம் உடலை தாக்கும் போது நமக்கு தூக்கத்தை தருகின்ற மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கிறது. இதன் காரணமாக தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Life Syle #Sleeping Tips #Healthy Life Style #Insomenia #Mobile Issue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story